இந்தியாவின் எதிர்காலம்!


இந்தியாவின் எதிர்காலம்!
14பிப்ரவரி 1897 அன்று மாலை ஹார்ம்ஸ்டன் சர்க்கஸ் வளாகத்தில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு.

உலகில் வேறெந்த நாட்டையும் அறிவு என்பது தன் இருப்பிடமாகக் கொள்ளுமுன் குடிபுகுந்த தாயகம் நமது புராதன கடல்போல் பொங்கிப் புரண்டோடுகின்ற பேராறுகளும், அடுக்கடுக்காய் உயர்ந்தெழுந்த சிகரங்கள்மீது பனிமுடி தரித்து ஏதோ வானுலக ரகசியங்களைஎட்டிப்பார்க்க விழைவது போல் விண்முட்ட நிற்கின்ற நிலையான இமயமலைத் தொடர்களும் அதன் ஆன்மீக மாட்சிமையைப் புறத்தில் காட்டுவது போல் உள்ளது இதுவரை வாழ்ந்தவர்களுள் மகத்தான ரிஷிகளின் திருப்பாதங்கள் இதோ இந்த பாரத மண்ணில்தான் நடைபோட்டன. மனிதனின் இயல்பு பற்றியும் அகவுலகம் பற்றியும் இங்கு தான் முதலில் ஆராய்ச்சிகள் தொடங்கின ஆன்மாவின் அமரத்துவம் அனைத்தையும் ஆட்சி புரிகின்ற கடவுள் இயற்கையிலும் மனிதனிலும் ஊடுருவி நிற்கின்ற இணைவன் போன்ற கோட்பாடுகள் இங்குதான் முதலில் எழுந்தன. இங்குதான் மதம் மற்றும் தத்துவத்திலுள்ள மிகவுயர்ந்த லட்சியங்கள் உச்ச நிலைகளை எட்டின இந்த நாட்டிலிருந்துதான் ஆன்மீகமும் தத்துவமும் அலைபோல் மீண்டும் மீண்டும் பாய்ந்துசென்று உலகை ஆக்கிரமித்தது. நலிந்து கொண்டிருக்கின்ற மனித குலத்திற்கு உயிரையும் உத்வேகத்தையும் ஊட்டுவதற்கு இந்தப் பூமியில் இருந்துதான் மறுபடியும் அலைகள் புறப்பட்டுச் சென்றாக வேண்டும் நூற்றுக்கணக்கான அன்னியர் படையெடுப்புகளும் நூற்றுக்கணக்கான பழக்க வழக்கங்களின் ஏற்படுத்திய அதிர்ச்சிகளை ஏற்றும் நிலைகுலையாமல் நிற்பதும் அதே இந்தியா தான் என்றும் குன்றாக சக்தியுடன் அழியாத வாழ்வுடன் உலகின் எந்தப் பாறையை விடவும் உறுதியாக இருப்பது அதே நாடுதான். ஆன்மாவைப்போல் நமது நாடும் தோற்றம் முடிவும் இல்லாததாக நித்தியமானதாக உள்ளது. இத்தகைய நாட்டின் அருமைக் குழந்தைகள் நாம்.

இந்தியாவின் குழந்தைகளே சில செயல்முறை விஷயங்களைப்பற்றிப் பேசுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். கடந்த காலப் பெருமைகளை உங்களுக்கு நான் நினைவுபடுத்துவதன் காரணம் இதுதான் கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது சீரழிவிற்கே வழிவகுக்கும் அது வெறும் வீண் வேலை எனவே நாம் எதிர்காலத்தைப்பற்றி எண்ண வேண்டும் என்று பலர் கூறக் கேட்டதுண்டு உண்மைதான் ஆனால் கடந்த காலத்திலிருந்து தான் எதிர்காலம் உருவாகிறது. எனவே உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு திரும்பிப் பாருங்கள் பின்னால் உள்ள வற்றாத அந்த ஊற்றுக்களிலிருந்து நன்றாக பருகுங்கள். அதன்பின்னர் முன்னே பாருங்கள் .பீடுநடை போட்டுச் செல்லுங்கள்முன்பிருந்ததைவிட ஒளிமயமானதாக சிறப்பானதாக, உன்னதமானதாக உருவாக்குங்கள் நம் முன்னோர்கள் மகத்தானவர்களாக இருந்தார்கள். முதலில் அதை நினைத்துப் பார்க்க வேண்டும் , நாம் எதனால் ஆக்கப்பட்டிருக்கிறோம் நமது ரத்தக் குழாய்களில் ஓடுகின்ற ரத்தம் எது என்பதை அறிய வேண்டும் அந்த ரத்தத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். பழங்காலத்தில் நமது முன்னோர் மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையிலிருந்தும் பழம் பெருமையைப் பற்றிய உணர்விலிருந்தும் உணர்விலிருந்தும் முன்னை விடச் சிறப்பான தொரு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.

வீழ்ச்சியும் அழிவும் உள்ளகாலகட்டங்களும் வரலாற்றில் இருக்கவே செய்தன, நான் அவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை ; அவை நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமும்தான் . அத்தகைய காலகட்டங்களும் தேவையாகவே இருந்தன. ஒரு பெரிய மரத்தில் அழகிய பழம் ஒன்று பழுக்கிறது அந்தப்பழம் பூமியில் வீழ்ந்து கெட்டு அழுகுகிறது. அந்த அழுகலிலிருந்துதான் எதிர்கால மரத்திற்கான முளை வருகிறது ஒருவேளை இந்த மரம் முதல் மரத்தைவிடப் பெரிதாகக் கூட இருக்கலாம். எனவே நாம் கடந்து வந்த வீழ்ச்சியும் அழிவும் நிறைந்த கால கட்டமும் மிகவும் தேவையே இந்த வீழ்ச்சியிலிருந்து தான் எதிர்கால இந்தியா பிறகும். அது முளைவிட்டு கொண்டிருக்கிறது, அதன் முதல் தளிர்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன, ஒரு மாபெரும் மரமான ஊர்த்வ மூலம் வளரத் தொடங்கி விட்டது. அதைப்பற்றித் தான் நான் இன்று உங்களிடம் பேச உள்ளேன்.

இந்தியாவில் பிரச்சினைகள் மற்ற எந்த நாட்டுப் பிரச்சினைகளைவிட மிகவும் சிக்கலானது முக்கியமானதும் ஆகும். இனம் மதம்மொழி அரசாங்கம் இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாட்டை உருவாக்குகின்ற உலகத்தின் ஒவ்வோர் இனத்தையும் இந்த நாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் அந்த நாடுகளை உருவாக்கிய அடிப்படைகள் இந்த நாட்டை உருவாக்கியவற்றைவிட மிகவும் குறைவாகவே இருக்கும் ஆரியர், திராவிடர், தார்த்தர் துருக்கியர், மொகலாயர், ஐரோப்பியர் என்று உலகத்தில் உள்ள எல்லா இனங்களின் ரத்தமும் இங்கே இந்தப் பூமியில் கலந்திருப்பது தோன்றுகிறது மொழிகளில் கூட இங்கே அற்புதமான கலப்பு உள்ளது. பழக்க வழக்கங்களைப் பொறுத்த வரை ஐரோப்பியர்களுக்கும் கீழை இனங்களுக்கும் உள்ள வேறுபாடுகளைவிட அதிகமாக உள்ளன.

நமது பொதுவான அடிப்படை நமது புனிதமான பாரம்பரியம் நமது மதம் தான். அது ஒன்றுதான் நமக்கு பொதுவாக உள்ள அடித்தளம். அதன்மீதுதான் கட்டிடத்தை எழுப்ப வேண்டும் ஐரோப்பாவில் அரசியல் கொள்கைகள் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கின்ற ஆசியாவில் மத லட்சியங்கள் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றன. எனவே எதிர் கால இந்தியாவிற்கு நிறைவேற்றப்பட வேண்டிய முதல் நிபந்தனை மத ஒற்றுமை. இந்த நாடு முழுவதும் ஒரேயொரு மதம் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும். ஒரு மதம் என்பதன் மூலம் நான் எதைக் குறிப்பிடுகிறேன்? கிறிஸ்தவர்களோ முகமதியர்களோ பௌத்தர்களோ கருதுகின்ற பொருளிலுள்ள ஒரு மதத்தை அல்ல. நம்மிடையே உள்ள மதப் பிரிவுகள் பல்வேறு விதமான முடிவுகளை கொண்டிருக்கின்றன, வேறுபட்ட உரிமைகளைக் கொண்டிருக்கின்றன. எனினும் அவை எல்லாவற்றிற்கும் பொதுவாகச் சில விஷயங்கள் உள்ளன. இந்தப் பொது விஷயங்களாகிய எல்லைகுள்நமது மதம் அற்புதமான வேறுபாடுகளை அனுமதிக்கிறது ; நம் சொந்த வாழ்கையைச் சிந்திக்கவும் நடத்தவும் அளவற்ற சுதந்திரத்தை அளிக்கிறது. நமது மதத்தின் உயிரோட்டத்தை அளிப்பதான இந்தப் பொதுக் கருத்துக்களை வெளியே கொண்டுவர வேண்டும், ஆண் பெண் குழந்தை என்று இந்த நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் அவற்றை அறிய வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் புரிந்துகொண்டதைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் இதுவே நாம் வேண்டுவது, இங்குள்ள நம் அனைவருக்கும், குறைந்த பட்சம் நம்முள் சிந்திக்கும் திறன் உள்ளவர்களுக்காவது இது தெரியும். இதுதான் முதல்படி எனவே அதனை முதலில் செய்துமுடிக்க வேண்டும்.

ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் இனப் பிரச்சினைகள் மொழிப் பிரச்சினைகள் சமுதாயப் பிரச்சினைகள் தேசியப் பிரச்சினைகள் எல்லாமே எவ்வாறு மதத்தின் ஒருங்கிணைக்கின்ற சக்தியின் முன்னால் மறைந்து விடுகின்றன என்பதை நாம் காண்கிறோம். இந்தியா மனத்தைப் பொறுத்தவரை மத லட்சியங்களை விட உயர்ந்தது எதுவும் இல்லை அதுவே இந்திய வாழ்வின் அடிப்படை அம்சம், அதன் மூலம்தான் மிகவும் குறைவான எதிர்ப்புக்களோடு நாம் வேலை செய்ய முடியும் மத லட்சியமே மிகவுயர்ந்த லட்சியம் என்பது உண்மை மட்டுமல்ல , இந்தியாவைப் பொறுத்தவைரையில் செயல் புரிவதற்கான ஒரே வழி இதுதான். இதை பலப்படுத்திக் கொள்ளாமல் மற்ற எந்த வழியிலாவது வேலை செய்து பாருங்கள் முடிவு விபரீதமாகவே இருக்கும்.

எனவே எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்குகான முதல் முயற்சி, யுகயுகங்களாக உறுதியாக இருக்கின்ற அந்தப் பாறையைக் கடைந்து பெற வேண்டிய முதல் படி மத ஒற்றுமை ஆகும் இந்துக்களாகிய நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று உண்டு துவைதிகள் விசிஷ்டாத்வைதிகள் அத்வைதிகள் ஆகட்டும், இல்லை மற்ற பிரிவுகளான சைவர்கள், வைணவர்கள், பாசு பதர்கள் என்று நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்துக்களாகிய நம் அனைவருக்கும் அடிப்படையான சில கருத்துக்கள் உள்ளன. நமது நன்மைக்காகவும் நம் இனத்தின் நன்மைக்காகவும் நம்மிடைய உள்ள சின்னஞ்சிறு சச்சரவுகளையும் வேற்றுமைகளையும் விடுவதற்கான வேளை வந்து விட்டது இந்தச் சண்டைகள் எல்லாம் முற்றிலும் தவறானவை என்பதில் உறுதி கொள்ளுங்கள் அவை நம் சாஸ்திரங்களால் கண்டிக்கப்பட்டிருக்கின்றன, நம் முன்னோர்களால் தடுக்கப்பட்டிருக்கின்றன. எந்த மாமனிதர்களை நாம் நமது முன்னோர்கள் என்று உரிமை கொண்டாடுகிறோமோ, யாருடைய ரத்தம் நம் ரத்தக் குழாய்களில் ஓடுகிறதோ , அவர்கள் தங்கள் குழந்தைகளான நாம் சிறுசிறு வேற்றுமைகளுக்காக அடித்துக்கொள்வதைக் கண்டு நம்மை வெறுப்புடன் பார்க்கின்றனர்.

இந்தச் சண்டைகளை விட்டுவிட்டால் போதும், மற்ற எல்லா முன்னேற்றங்களும் வரும். ரத்தம் புஷ்டியாகவும் தூய்மையாகவும் இருக்குமானால் நோய்க் கிருமிகள் எதுவும் அந்த உடம்பில் வாழ முடியாது. நமது ஜீவ ரத்தம் ஆன்மீகம் அது தெளிவாக ஓடு மானால், புஷ்டியாக தூய்மையாக உத்வேகத்துடன் ஓடுமானால் எல்லாம் சரியாக இருக்கும். அந்த ரத்தம் தூய்மையாக இருக்குமானால் உத்வேகத்துடன் ஓடுமானால் எல்லாம் சரியாக இருக்குமானால் அரசியல் சமுதாயம், மற்ற பொருளாதாரக் குறைபாடுகள் எல்லாம் சீர் செய்யப்பட்டுவிடும் ஏன் நாட்டின் வறுமைகூடத் தீர்க்கப்பட்டுவிடும் . ஏனென்றால் நோய்க்கிருமி வெளியே எறியப்பட்டுவிடுமானால் , வேறெதுவும் ரத்தத்தில் கலக்க முடியாது.

தற்கால மருத்துவத்திலிருந்து ஓர் உவமையை எடுத்துக் கொள்வோம் நோய் உண்டாக இரண்டு காரணங்கள் இருந்தாக வேண்டும் : ஒன்று வெளியிலுள்ள நச்சுக் கிருமி , மற்றொன்று உடம்பின் நிலைமை. உடம்பு அந்தக் கிருமிகளை உள்ளே அனுமதிக்கும் நிலையில் இருக்காதவரை உடம்பின் எதிர்க்கும் சக்தி குறைவாகி அதனால் அந்தக் கிருமிகள் உடம்பினுள் நுழைந்து செழித்துப் பெருகுகின்ற ஒரு நிலை உருவாகாதவரை எந்தக் கிருமிக்கும் உடம்பினுள் ஒரு நோயை உண்டாக்குகின்ற சக்தி இல்லைஉண்மையில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான கிருமிகள் உடம்பைப் பற்றிக் கொண்டு நோயை உண்டாக்குகின்றன , ஆனால் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்வரை அவற்றைப் பற்றிய உணர்வே ஏற்படுவதில்லை. உடம்பு பலவீனமாகும் போது மட்டுமே இந்தக் கிருமிகள் உடம்பைக் பற்றிக் கொண்டு நோயை உண்டாக்குகின்றன. தேசிய உடல் பலவீனமாக இருக்கும் போது அரசியல் சமுதாயம் கல்வி அறிவு போன்ற எல்லா நிலைகளிலும் எல்லா வகையான நோய்க் கிருமிகளும் ஆக்கிரமித்து நோய்களை உண்டாக்குகின்றன. இதைக் குணமாக்க வேண்டுமானால் நோயின் வேருக்கே செல்ல வேண்டும் ரத்தத்திலுள்ள எல்லா அசுத்தங்களையும் நீக்க வேண்டும் நாம் செய்ய வேண்டுவதெல்லாம் மனிதனைப் பலப்படுத்தும், ரத்தத்தைத் தூய்மையாக்குவதும் வெளியேயிருந்து வருகின்ற விஷங்களை எதிர்த்து அவற்றை வெளியில் தள்ளுவல்லதாக உடம்பை வலமைபெறச் செய்வதும்தான்.

நமது பலமும் நமது உத்வேகமும் மட்டுமின்றி நம் தேசிய வாழ்வும் மதத்தில்தான் இருக்கிறது என்பதைப் பார்த்தோம் இப்படி நாட்டின் ஆதாரமே மதத்தில் இருப்பது சரியா தவறா? காலப்போக்கில் அதனால் நன்மை விளையுமா விளையாதா என்பதைப் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை ஆனால் நல்ல தற்கோ கெட்டதற்கோ அது அங்கே இருக்கிறது. நீங்கள் அதிலிருந்து விலகி ஓட முடியாது .இன்றைக்கும் என்றென்றைக்குமாக நீங்கள் அதைப் பெற்றிருக்கிறீர்கள். எனக்கு நமது மதத்தில் உள்ளது போன்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றாலும் நீங்கள் அதனுடன்தான் வாழ்ந்தாக வேண்டும் அதனுடன் நீங்கள் கட்டப்பட்டு இருக்கிறீர்கள், அதை விட்டுவிலகினால் தூள்தூளாகி விடுவீர்கள் அதுதான் நம் இனத்தின் ஜீவாதாரம் அதை நாம் பலப்படுத்த வேண்டும். அந்த மதம் என்பதை மிகுந்த அக்கறையுடன் பேணிக்காத்தால் தான் வேறு எல்லாவற்றையுமே அதற்காகத் தியாகம் செய்ததால்தான் பல நூற்றாண்டுகளாக வந்தஅதிர்ச்சிகளை எல்லாம் உங்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது.

உங்கள் முன்னோர் அதைக் காப்பதற்கு எல்லா துன்பங்களையும் ஏன் சாவையும் கூடத் தைரியமாகச் சந்தித்தார்கள். அன்னியர் படைகள் நமது கோயில்கள் ஒவ்வொன்றையும் தரைமட்டமாக்கின. ஆனால் அந்த அலை ஓய்ந்ததுமே கோயில்களும் கோபுரங்களும் மீண்டும் எழுந்தன. தென்னிந்தியாவின் இத்தகைய சில புராதனமான கோயில்களும், குஜராத்தின் சோமநாதர் கோயில் போன்றவையும் எத்தனையெத்தனையோ விஷயங்களை உங்களுக்கு உணர்த்த முடியும் ; உங்கள் இனத்தின் சரித்திரத்தைப்பற்றி அடுக்கடுக்கான நூல்கள்கூறுவதை விட ஆழ்ந்த விஷயங்களைத் தர முடியும் நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அடையாளங்கள் இந்தக் கோயில்களில் உள்ளன நூற்றுக்கணக்கான முறையும் அவை புதுப்பிக்கப்பட்டன. தொடர்ந்து அவை அழிக்கப்பட்டன.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,