இந்து சமயம் பகுதி-4


இந்து சமயம் பகுதி-4
ஆனால் சம்ஹிதையிலுள்ள கதைகள் மற்றபுராணங்களிலிருந்து ஒரு கருத்தில் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது, அது என்னவெனில் இந்தக் தேவர்களுடன் எல்லையற்ற தன்மைக் கருத்தும் இணைந்திருப்பதுதான். இந்த எல்லையற்ற தன்மை உருக் கொடுக்கப்பட்டு. சிலவேளைகளில் ஆதித்தன் என்று சித்தரிக்கப்படுகிறது. இன்னும் சில வேளைகளில் எல்லா தேவர்களும் எல்லையற்ற தன்மையுடன் இணைத்துப் பேசப்பட்டிருக்கின்றனர். சான்றாக இந்திரனை எடுத்துக் கொள்ளுங்கள். சில நூல்களில் இந்திரனுக்கு உடல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவன் ஆற்றல் படைத்தவனாக இருக்கிறான். தங்கக் கவசமணிந்து பூமிக்கு வந்து பக்தர்களுடன் உண்டுகளிக்கிறான். அசுரர்களையும் நாகங்களையும் வெல்கிறான். ஒரு பாடல் இந்திரனை மிக உயர்ந்த இடத்தில் வைத்து எல்லாம் அறிந்தவனாக, எல்லாம் வல்லவனாக எல்லா உயிர்களின் உள்ளங்களையும் அறிந்தவனாகப் போற்றுகிறது.

வருணதேவனும் இம்மாதிரிதான். இவன் காற்றிற்கும் நீருக்கும் தலைவன் ஆரம்பத்தில் இந்திரனைப் போலவே புகழ்ப்படுகின்ற இவன், திடீரென்று உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன் என்றெல்லாம் போற்றப்படுகிறான்.வருணனைப் பற்றிய ஒரு பகுதியைப் படிக்கிறேன். நான் கூறியது, அப்போது உங்களுக்கு விளங்கும். அது ஆங்கிலக் கவிதையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை அப்படியே படிக்கிறேன் -

விண்ணில் உறையும் மாதேவன் நம் செயலை
அருகில் இங்கிருந்து பார்ப்பதுபோல் பார்க்கிறான்.
மக்கள் தங்கள் செயலை மறைத்தே வைத்தாலும்
மாதேவன் அச்செயல்களை அறிந்துள்ளான்.
நின்றாலும் நடந்தாலும் இடம் இடமாக ஒளிந்தாலும்,
ரகசிய அறைக்குள் உன்னை அடைத்துக் கொண்டாலும்
அவன் அந்த இடத்தைக் கண்டுகொள்கின்றான்
சதிசெய்யும் இருவர் தனித்தே இருந்தாலும்
வருணன் அங்கு சென்று மூன்றாமவன் ஆகின்றான்.
அதனாலே அந்தச் சதி அம்பலமாகி விடுகிறது.
விண்ணும் மண்ணும் அவனுக்கே சொந்தமாக இருந்தாலும்,
கடலும்கூட அவனுக்கே சொந்தமாக இருந்தாலும்
சின்னஞ்சிறு குட்டையே அவன் உறையும் இடமாகும்.
உயர உயரப் பறந்து வெளியே செல்ல முயன்றாலும்
அவன் வருணனின் பார்வையிலிருந்து தப்ப முடியாது.
விண்ணிலிருந்து வருகின்ற அவனது தூதர்கள்
உலககெங்கும் சஞ்சரிக்கிறார்கள்.
ஆயிரம் கண்கொண்டு உலகெல்லாம் பார்க்கின்றார்கள்.

மற்ற தேவர்களையும் இதுபோல நாம் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொருவராக வருகின்றனர். முதலில் அவர்கள் தேவர்களாக இருக்கிறார்கள் பிறகு இந்தப் பிரபஞ்சம் யாரிடம் நிலைபெறுகிறதோ, யார் அனைவர் உள்ளத்தையும் அறிகிறாரோ யார் இந்தப் பிரபஞ்சத்திற்குத் தலைவராக இருக்கிறாரோ அவரது இடத்திற்கு உயர்த்தப்படுறார்கள்.

வருணதேவன் விஷயத்தில் மற்றொரு கருத்தும் தோன்றியது. ஆனால் முளைவிடுவதற்குள் ஆரிய மனம் அதை அடக்கிவிட்டது அதுதான் பயம். பாவம் செய்து விட்டோம் என்று பயந்து அவர்கள் வருணனிடம் மன்னிப்புக் கேட்பதாக ஓரிடத்தில் காணப்படுகிறது. இத்தகைய கருத்துக்கள் இந்திய மண்ணில் வளர முடியவில்லை. ஏன் என்பது பிறகு உங்களுக்கு விளங்கும். ஆனால் பயம், பாவம் இவற்றின் விதைகள் முளைவிடத் தொடங்கிவிட்டன. இந்தக் கருத்துதான் ஒரே கடவுள் கொள்கை என்று சொல்லப்படுகிறது. அது உங்கள் அனைவருக்கும் தெரியும் நெடுங்காலத்திற்கு முன்பே இந்தக் கருத்து இந்தியாவில் தோன்றிவிட்டது. சம்ஹிதைகளிலும் ஆரம்பமும் மிகமிக பழையதும் ஆகிய பகுதிகளிலேயே இந்தக் கருத்து உள்ளது. அது ஆசிரியர்களுக்கு அது திருப்தி அளிக்கவில்லை. அது ஒரு பக்குவப்படாத கருத்து என்று ஒதுக்கிவிட்டு இந்துக்களாகிய நாம் நினைப்பது போல் இன்னும் மேலாகச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

வேதங்களைப்பற்றி ஐராப்பியர்கள் எழுதிய நூல்களையும் ஆய்வுகளையும் படிக்கும் போது இந்துவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. நாம் மேலே கண்ட பழைய கருத்துக்கள்தான் வேதங்களில் முழுவதமாக உள்ளன என்று அவர்கள்கூறுகிறார்கள்.கடவுளைப் பற்றிய மிக உயர்ந்த கருத்து சகுணக் கடவுள் கருத்தே என்று தங்கள் தாய்ப்பாலுடனேயே பருகிய இவர்களுக்குப் பண்டைய இந்தியாவின் சிந்தனைச் சிற்பிகள் சிந்திக்கத் துணிச்சல் எங்கே? சம்ஹிதைகளில் நிறைந்துள்ள ஒரே கடவுள்- கருத்து பயனற்றது, தத்துவ ஞானிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் தகுதியற்றது என்று விலக்கிவிட்டு, அதைவிட அதிகத் தத்துவ ஞானம் உள்ளதும், அப்பாற்பட்டதுமான ஒரு கருத்தைப் பெற ஆரியர்கள் கடுமையாகப் போராடியது தெரிந்தும், அதைப் பாராட்டும் துணிச்சல் இந்த ஐரோப்பியர்களுக்கு இல்லை இருக்காதுதான்!

ஆனால் பிரபஞ்சம் முழுவதும் அவனிலேயே நிலை பெறுகிறது,எல்லா இதயங்களையும் நீதான் வைத்துக் கொண்டிருக்கிறாய் என்றெல்லாம் விவரித்தாலும் ஒரே கடவுள் கருத்து அந்த பண்டைய ஆரியர்களுக்கு மிகவும் சாதாரணமாகப்பட்டது. இந்துக்கள் துணிச்சலானவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட அவர்கள் துளிகூடத் தயங்கியதில்லை என்று அவர்களைப்பற்றிப் பெருமையாகச் சொல்ல வேண்டும் அவர்களின் ஒரு சிறு சிந்தனைப் பொறிகூட மேலை நாடுகளின் துணிச்சல் மிக்கவர்கள் என்ற கருதப்படுகின்ற சிந்தனையாளர்களை நடுங்கச் செய்கிறது. இந்த ஆரிய சிந்தனையாளர்களைப் பற்றிப் பேராசிரியர் மாக்ஸ்முல்வர், இவர்கள் மிக உயர்ந்த இடத்திற்குப் போய்விட்டார்கள். அங்கு இவர்களின் சுவாசப்பைகள் தாம் மூச்சுவிட முடியும். மற்றவர்களின் சுவாசப்பைகள் வெடித்துவிடும் என்று சரியாகத் தான் சொன்னார்.

தங்கள் பகுத்தறிவு எங்ககெல்லாம் இவர்களை அழைத்துச் சென்றாதோ, அங்கெல்லாம் இந்த தைரிய சாலிகள் சென்றார்கள். அதன் காரணமாகத் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப் பற்றியோ, தங்கள் மூடக் கொள்கைகள் பொடிப்பொடியாக உடைந்ததைப் பற்றியோ, சமுதாயம் தங்களைப்பற்றி என்ன நினைக்கும் என்ன பேசும் என்பதைப் பற்றியோ கவலைப்படவில்லை தாங்கள் எதைச் சரியானது உண்மையானது என்று எண்ணினார்களோ அதைப் பிரச்சாரம் செய்தார்கள், அதையே பேசினார்கள்.

பண்டைய வேத ரிஷிகளின் இந்த சிந்தனைகளைப் பற்றிய பேசுவதற்கு முன்னர் வேதங்களின் ஒன்றிரண்டு விசித்திரான அம்சங்களைக் குறிப்பிட வேண்டும். இந்த தேவர்கள் ஒவ்வொருவராக எடுத்துக் கொள்ளப்பட்டு, உயர்த்தப்பட்டு கடைசியில் பிரபஞ்சத்தின் எல்லையற்ற சகுணக் கடவுள் என்ற அளவிற்குக் கொண்டுசெல்லப் படுகிறார்கள். இதற்கு என்ன விளக்கம்? இது இந்துக்களுக்கே உரிய தனி அம்சம் ஆதலால் பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இதற்கு ஒரு புதிய சொல்லையே படைக்கிறார். இதை அவர் ஹெனோதீசம் என்கிறார் . நாம் அதற்கு விளக்கம் தேடி எங்கும் போக வேண்டியதில்லை. அது வேதங்களிலேயே உள்ளது. இந்த தேவர்கள் உயர்த்தப்பட்டு ஒரே கடவுளாக ஆக்கப்படும் இடத்திற்கு பக்கத்திலேயே விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்துப் புராணங்கள் மற்ற நாட்டுக் கதைகளை விட ஏன் இப்படி தனிப் பெருமையுடன் விளங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. பாபிலோனிய கிரேக்க புராணங்களில் ஒரு தேவன் முயன்று உயர்ந்த இடத்தை அடைகிறான் உடனே மற்ற தேவர்கள் மறைந்துவிடுகிறார்கள். மொலாக்குகள் அனைவரிலும் ஜெஹோவா உயர்ந்து முன்மையானவுடன் மற்ற எல்லா மொலாக்குகளும் அடியோடு மறக்கப்பட்டுவிடுகிறார்கள்.

கிரேக்க தேவர்கள் விஷயத்திலும் இப்படியேதான் ஸ்யூஸ் பெரியவனாகி உயர் நிலையை அடைந்து பிரபஞ்சத்திற்கு ஒரே கடவுளாகிவிடுகிறான். மற்ற தேவர்கள் அனைவரும் தேவதூதர்கள் என்னும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பிற்காலத்திலும் இப்படியே நடந்தது.

பௌத்தர்களும் சமணர்களும் தங்கள் தீர்க்கதரிசிகளுள் ஒருவரைக் கடவுள் நிலைக்கு ஏற்றி வைத்துவிட்டு, மற்ற தேவர்களை புத்தருக்கோ மகாவீரருக்கோ கட்டுப் பட்டவர்களாச் செய்துவிட்டார்கள் . உலகம் முழுவதும் இப்படியேதான் நடந்து வந்திருக்கிறது.

இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு வேதங்களில்தான் காணப்படுகிறது என்று சொல்ல வேண்டும். ஒரு தேவன் உயர் நிலையில் வைத்து புகழப்படுகிறான் . அந்த நேரத்திற்கு மற்ற தேவர்கள் அவனுக்கு அடங்கி நடக்ககின்றனர். வருணன் ஒரு தேவனைத் துதித்து மேல் இடத்தில் ஏற்றி வைக்கிறான். அந்த வருணனே அந்த உயர்ந்த இடத்தில் இருப்பதாக மற்றொரு பகுதியில் காண்கிறோம். அவர்கள் ஒருவர்பின் ஒருவராக சகுணக் கடவுள் நிலையில் வைக்கப்படுகிறார்கள். இதற்கான விளக்கமும் வேதங்களில் காணப்படுகிறது. அது மிகவும் உன்னதமான விளக்கம். அதுதான் தொடர்ந்த இந்தியச் சிந்தனைகளுக்குக் கெல்லாம் பொருளாக இருக்கிறது. உலக சமயங்களுக்கே பொருளாகின்ற ஒன்று என்று கூட அதனைக் கூறலாம். அதுதான் ஏகம்; ஸத் விப்ரா பஹுதா வதந்தி உள்ளது ஒன்றுதான்; மகான்கள் அதைப் பல பெயர்களால் வழங்குகிறார்கள் ,இந்தத் துதிப் பாடல்களில் எல்லாம் போற்றப்படுவது ஒரே கடவுளே. துதித்தவர்கள் தான் வேறுபாடுகளைக் கண்டவர்கள், . துதித்தவர்கள் ரிஷிகள், கவிஞர்கள். அவர்களே வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு சொற்களில் ஒரே கடவுளைப் போற்றிப் பாடினார்கள்.

உள்ளது ஒன்றுதான் மகான்கள் அதைப் பல பெயர்களால் வழங்குகிறார்கள் . இந்த ஒரு வாக்கியத் திலிருந்து பெரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்திய நாடு ஒன்றில் தான் சமய சம்பந்தமான கொடுமைகள் நடக்கவில்லை என்பதைக் கேட்க உங்களுள் சிலருக்குத் தகைப்பாக இருக்கலாம் . ஆத்திகன், நாத்திகன் , அத்வைதி , துவைதி எல்லோரும் அங்கே ஒரு தீங்கும் இல்லாமல் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள். கோயில்களின் படிகளில் நின்று ,தேவர்களுக்கு எதிராக ஏன் கடவுளுக்கு எதிராகவே பேச உலோகாயதர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். கடவுள் என்பதே ஒரு மூட நம்பிக்கை தேவர்கள், வேதங்கள், சமயம் எல்லாமே தங்கள் நலத்திற்காகப் புரோகிதர்கள் புனைந்த கதைகள் என்றெல்லாம் நாடு முழுவதும் அவர்கள் பேசினார்கள் அவர்களை யாரும் ஒன்றும் செய்யவில்லை. புத்தர் தாம்சென்ற இடமெல்லாம் இந்துக்களுக்குப் புனிதமான ஒவ்வொன்றையும் பழித்துக் கீழே தள்ள முயன்றார். ஆயினும் நீண்ட ஆயுள் வாழ்ந்து தான் புத்தர் இவ்வுலகம் நீத்துச் சென்றார். கடவுள் என்றால் சிரித்துப் பரிகசித்த சமணர்களும் அப்படித்தான். கடவுள் என்று ஒருவர் எப்படி இருக்க முடியும்? அது வெறும் மூட நம்பிக்கை ! என்றார்கள் அவர்கள். இப்படி எவ்வளவோ உதாரணங்கள் உள்ளன.

முகமதியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு சமய சம்பந்தமான கொடுமை என்றால் என்ன என்பது அங்கே யாருக்கும் தெரியாது. அன்னியர் அங்கு வந்து அதைச் செய்த பிறகுதான் இந்துக்களுக்கு அதுபற்றியே தெரிய வந்தது. கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளைக் கட்டுவதற்கு இந்தியர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் உதவி செய்தார்கள் இப்பொழுதும் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அங்கு ஒரு போதும் ரத்தம் சிந்தப்பட்டதில்லை; வைதீக சமயத் திற்குப் புறம்பாகவுள்ள பௌத்தம் போன்ற சமயங்கள் கூடத் தாக்கப்பட்டதில்லை.

புத்த சமயத்தைப் பார்ப்போம். சில விஷயங்களில் புத்தசமயம் மிகவும் உன்னதமானது. ஆனால் அதையும் வேதாந்தத்தையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. கிறிஸ்தவ சமயத்திற்கும் ரட்சணிய சேனைக்கும் உள்ளது போன்ற வேற்றுமையே இவை இரண்டிற்கும் என்று யாரும் கண்டு கொள்ளலாம் . புத்த சமயத்தில் மிகச் சிறந்த கருத்தக்கள் இருக்கின்றன. ஆனால் அவை தக்க முறையில் பேணிக் காப்பாற்ற முடியாதவர்களின் கைகளைச் சேர்ந்தன தத்துவ ஞானிகளிடமிருந்து கிடைத்த மாமணிகள் பாமரர்களின் கையில் சிக்கின; பாமரர்கள் அதை மேற்கொண்டனர். அந்தக் கருத்துக்களில் புத்துணர்வு இருந்தன. சில கருத்துக்கள் மகோன்னதமானவை மனிதநேயம் மிக்கவை. ஆனால் எதையும் விழிப்புடன் காக்ககூடிய அறிவும் சிந்தனையும் கூட இருக்க வேண்டும் அல்லவா? எங்கானாலும் சரி, மனிதநேயக் கருத்துக்கள் சாதாரண மக்களிடம் சிக்கிவிட்டால் உடனடியாக நாம் காண்பது சீரழிவு. கல்வியும் அறிவும் தான் எதையும் அழியாமல் காக்கின்றன.

உலகின் அப்போதைய நாகரீக நாடுகளில் எல்லாம் முதன்முதலாகப் புகுந்து பரவிய பிரச்சார சமயம் புத்த சமயம்தான் . அங்கெல்லாம் ஒரு துளி ரத்தமும் சிந்தப் படவில்லை. சீன நாட்டில் புத்தசமயப் பிரச்சாரகர்கள் எவ்வளவு கொடுமைக்கு உள்ளானார்கள், தொடர்ந்து இரண்டு மூன்று தலைமுறைச் சக்கரவர்த்திகள் ஆயிரக் கணக்கான பிரச்சாரகர்களை எப்படி கொன்று குவித்தார்கள் என்பதை நாம் படிக்கிறோம் அதன்பின் பௌத்தர்களுக்குச் சிறிது நல்ல காலம் பிறந்தது. சீனச்சக்கர வர்த்தி ஒருவர் பௌத்தர்களைத் துன்புறுத்தியவர்களைப் பழிவாங்கப் போவதாகக் கூறியபோது, பௌத்தப் பிரச்சாரகர்கள் அதை மறுத்துவிட்டார்கள்.

எல்லாம் இந்த ஒரு வாக்கியத்தின் பயன்தான் அதனால்தான் நீங்கள் அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் . இந்திரன் மித்திரன் வருணன் என்றெல்லாம் அழைக்கப்படுவது உள்ளது ஒன்றே மகான்கள் அவரைப் பல பெயர்களிட்டு வழங்குகிறார்கள்.

அது எப்போது எழுதப்பட்டது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் . இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப் பட்டதாக இருக்கலாம் இந்த சமயச் சிந்தனைகளுள் ஒன்று கூட சமீப காலத்தைச் சேர்ந்தவை அல்ல. ஆனால் எழுதப்பட்ட அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன் முன்னைவிடப் புதுப்பொலிவுடன் திகழ்வதாக கூறலாம் அந்தப் பண்டைய காலத்தில் இன்றுபோல் மனிதன் அவ்வளவு நாகரீகம் படைத்தவனாக இருக்கவில்லை; தான் நினைத்ததிலிருந்து சிறிது வேறாகவே நினைதான் என்பதற்காகச் சகோதரனின் தலையை வெட்ட வேண்டும் என்று மனிதன் எண்ணம் கொள்ளவில்லை. அவன் உலகை ரத்ததில் மூழ்கடிக்க வில்லை தன் சகோதரனுக்கே அவன் அசுரனாக மாறவில்லை மனித சமுதாயத்தின் பெயரால் மக்களை வெட்டிக் குவிக்கவில்லை. அதனால்தான் இந்த வாக்கியம் அன்றைவிட இன்று இன்னும் புத்துணர்வுடன் வாழ்வளிக்கும் ஒன்றாக நம்முன் வருகிறது இருப்பது ஒன்றே மகான்கள் அதைப் பல பெயர்களால் வழங்குகிறார்கள். உலகிலுள்ள எல்லா சமயங்களும் அது இந்து சமயமோ புத்த சமயமோ, முகமதிய சமயமோ, கிறிஸ்தவ சமயமோ எந்த சமயமாயினும் சரி அனைத்திற்கும் கடவுள் ஒருவரே. இந்த சமயங்களுள் எந்த சமயத்தையும் பழிப்பவன் தனது கடவுளைப் பழிப்பவனே இது நாம் கற்க வேண்டியடவற்றுள் ஒன்றாகும்.

அவர்கள் கண்ட முடிவு இதுதான். நான் சொன்னது போல் ஒரே கடவுள் கருத்து இந்துவின் மனத்திற்குத் திருப்தி அளிக்கவில்லை. அது ஆழமானதாக இல்லை அது நாம் காணும் உலகை விளக்கவில்லை. உலகத்தை ஆளும் ஒருவர் இருக்கிறார் என்று கூறுவது உலகத்திற்கான விளக்கம் ஆகாது ஒரு போதும் ஆகாது பிரபஞ்சத்திற்கு ஒரு தலைவர் இருக்கிறார் என்பது பிரபஞ்சத்திற்கு விளக்கமாகாது அதுவும் அவர் பிரபஞ்சத்திற்கு வேறானவர் என்று கூறும் போது அதை ஒரு விளக்கம் என்றே சொல்ல முடியாது. அவர் நமக்கு நல்வழி காட்டுபவராக இருக்கலாம் , புவனத்திலேயே மிக அதிக சக்தி படைத்தவராக இருக்கலாம் புவனத்திலேயே மிக அதிக படைத்தவராக இருக்கலாம் , ஆனால் அது பிரபஞ்ச்திதிற்கு விளக்கம் ஆகாது.

ஆகவே பிரபஞ்சத்தைப் பற்றிய கேள்விதான் இப்பொழுது பெரிய அளவில் நம்முன் நிற்கிறது ; இது எங்கிருந்து வந்தது எப்படி வந்தது? எப்படி நிலைத்து நிற்கிறது? இதற்கு விளக்கமாக எத்தனையோ பாடல்கள் எழுந்தன ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்று அவ்வளவு கவிநயத்துடனும் அழகாகவும் வேறு எங்கும் சொல்லப்படவில்லை.

அப்போது அங்கே ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லாமலும் இல்லை. காற்று இல்லை வானம் இல்லை . எதுவுமே இல்லை அனைத்தையும் எது மூடியிருந்தது? எல்லாம் எங்கே நிலைபெற்றிருந்தன அப்போது இறப்பு இல்லை ; இறவாத நிலையுமில்லை பகல் இரவாகி இரவு பகலாகும் மாற்றமும் இல்லை, மொழிபெயர்பில் கவிதையின் அழகு குன்றி விடுகிறது. இறப்பு இல்லை இறவாத நிலையுமில்லை பகல் இரவு என்ற மாறுதலும் இல்லை. சம்ஸ்கிருத்தின் ஒலியே இன்னிசையாக உள்ளது . அது இருந்தது அந்த இறைவனின் இருப்பையே மறைப்பதுபோ ல் அந்த மூச்சு இருந்தது. ஆனால் அது இயங்கத் தொடங்கவில்லை.

அது இயக்கமற்றிருந்தது என்ற கருத்தைக் நாம்நினை வில் வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இந்தக் கருத்துதான் பிறக வளர்ந்து இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அதிர்வுகளின் தொகுதி மட்டுமே, அதாவது இயக்கங்களின் தொகுதி மட்டுமே அதாவது இயக்கங்களின் தொகுதி போன்றதே என்னும் இந்துக்களின் தத்துவக் கோட்பாட்டிற்குக் காரணமாக அமைந்தது இந்த இயக்கத் தொகுதி முழுவதும் குறைந்து கொண்டே வந்து நுட்பமாகி மிகவும் நுட்பமாகி அந்த நிலையிலேயே இருக்கின்ற காலகட்டங்களும் உண்டு. அந்த நிலைதான் மேற்கூறிய பாடலில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அது இயங்காமல் இருக்காது , அதிர்வுகளின்றி இருந்தது. படைப்பு தொடங்கியபோது அது அதிர ஆரம்பித்தது , இந்தப்படைப்பு முழுவதும் அதிலிருந்து வெளிவந்தது அந்த ஒரு மூச்சு அமைதி யுடன் தன்னைத்தானே தாங்கிக்கொண்டு இருந்தது வேறு ஒன்றுமில்லை,

முதலில் எங்கும் இருளே இருந்தது. இந்தியாவிலோ மற்ற வெப்ப நாடுகளிலோ திடீரென்று வானம் இருண்டு மழை பொழிவதை உங்களுள் யாராவது பார்த்திருந்தால் இந்தச் சொற்களில் ஆழம் புரியும். மூன்று பெரிய கவிஞர்கள் இதைச் சித்தரிக்க முயன்றது என் நினைவிற்கு ருகிறது. வெளிச்சம் இல்லை ஆனால் கண்ணுக்குப் புலனாகின்ற இருள் உண்டு என்கிறார் மில்டன். ஊசியினால் துளைக்கக்கூடிய இருள் என்று காளிதாசர் கூறுகிறார் துளைக்கக்கூடிய இருள் என்று காளிதாசர் கூறுகிறார். ஆனால் வேகத்தில் காணும் இந்த வர்ணனைக்கு ஒன்றும் ஒப்பாகாது - இருளில் மறைந்து கிடக்கும் இருள். எங்கும் வறண்டு கிடக்கின்றது. உலகம் முழுவதும் வெப்பத்தால் அல்லல்பட்டுக் கொண்டிடிருக்கிறது. இப்படியே பல நாட்கள் செல்கின்றன. ஒருநாள் பிற்பகலில் வானத்தின் எங்கோ ஒரு மூலையில் சிறு மேகம் தோன்றுகிறது. சிறிது நேரத்திற்குள் அது வானம் முழுவதும் பரவுகின்றது. இருண்ட முகில்கள் ஒன்றன் முழுவதும் பரவுகின்றது. இருண்ட முகில்கள் ஒன்றன் மேல் ஒன்று வந்து குவிந்து வெள்ளமாய்ப் பொழிகின்றன.

படைப்பு என்பதற்கான காரணம் சங்கல்பம் என்று கூறப்படுகிறது. முதலில் எது இருந்ததோ, அது சங்கல்பமாக மாறிற்று. சங்கல்பம் ஆசையாக வெளிப்பட்டது. இந்த ஆசை என்பதுதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று கூறப்படுவதால் நாம் இதைநினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இந்தச் சங்கல்பம் என்பது தான் பௌத்த சமயத்திற்கு வேதாந்த நெறிக்கும் மையக் கருத்தாக இருக்கிறது. பிறகு இது ஜெர்மானியர்களின் தத்துவ நூல்களில் புகுந்து ÷ஷாபனேரின் கருத்துக்களுக்கு ஆதாரமாக விளங்கியது இங்கு தான் முதலில் நாம் அதைப்பற்றிக் கேள்விப்படுகிறோம்.

மனத்தின் ஆதி விதையான ஆசை என்பது முதன் முதலில் எழுந்தது. ரிஷிகள் தங்கள் உள்ளத்தில் ஞானத்தின் மூலம் தேடி, இருப்பு, இல்லாமை இரண்டிற்கும் இடையே உள்ள பந்தத்தைக் கண்டுகொண்டார்கள்.

அந்தப் பரமபுருஷன் கூட ஒருவேளை அறியமாட்டான் என்ற வினோதமான கருத்துடன் அந்தக் கவிஞர் முடிக்கிறார்.

இதில் காணும் கவிதைநயம் ஒரு புறம் இருக்கட்டும். இந்தக் கவிதையிலிருந்துதான் பிரபஞ்சத்தைப் பற்றிய கேள்வி தீவிரமாக உருவெடுத்தது. ரிஷிகளின் சிந்தனையும் வளர்ந்துகொண்டே வந்தது. எந்தச் சாதாரண விடைகளும் அவர்களுக்குத் திருப்தி அளிக்க வில்லை . பிரபஞ்சத்தைக் காக்க கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்து கூட அவர்களுக்குத் திருப்திகரமாக இல்லை. இந்தக் கருத்துடன் கூடிய வேறு சில பாடல்களும் இருக்கின்றன. இந்தப் பிரபஞ்சம் எப்படி உண்டாயிற்று என்பதும் இதற்குத் தலைவன் ஒருவனை ஒரு சகுணக் கடவுளைத் தேடியபோது ஒவ்வொரு தேவனாக அந்த உயர்ந்த இடத்தில் ஏற்றிவைக்கப்பட்டான் என்பதெல்லாம் அந்தப் பாடல்களில் காணப் படுகின்றன.

அதுபோலவே ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை விவரித்துக் கொண்டே போய் முடிவில் அதுவே பிரபஞ்சம் முழுவதற்கும் காரணம் என்று கூறும் பாடல்களையும் காண்கிறோம். ஏதாவது ஒரு கருத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டு பிறகு உலகம் முழுவதும் அதில் நிலைத்திருப்பதாக அவை கூறுகின்றன. பிறகு இந்த ஆதாரமே எல்லாமாக ஆகியிருக்கிறது என்பது ஏற்படுகின்றது. பல்வேறு கருத்துக்களையும் அவர்கள் இந்த முறையிலேயே ஆராய்ந்தார்கள். வாழ்க்கைத் தத்துவமாகிய பிராணனை ஆராய்வதிலும் அவர்கள் இந்த முறையையே கையாண்டார்கள். பிராணன் என்ற கருத்து விரிவாக்கப் பெற்று முடிவில் எங்கும் நிறைந்ததாகவும் எல்லையற்றதாகவும் கொள்ளப்பட்டது இந்தப் பிராணன்தான் மனித உடலை மட்டும் அல்ல எல்லாவற்றையும் தாங்குகிறது. சூரியன் சந்திரன் இவற்றிலுள்ள ஒளியும் இதுதான் அனைத்தையும் இயக்கும் சக்தி இதுவே சில பகுதிகள் மிகவும் அழகாக கவிதை நயத்துடன் திகழ்கின்றன. வனப்பு மிக்க காலைப்பொழுதை அவனே நமக்கு அனுப்புகிறான் என்பது போன்ற வரிசுகள் ஓர் இனிய கீதம் போலவே ஒலிக்கின்றன.

நாம் முன்பு கண்டதுபோல் இந்தக் கருத்து அதாவது படைப்பிற்குக் காரணமான முதல் ஆசை என்னும் கருத்து விரிவடைந்து எங்கும் நிறைந்த கடவுளாக நிறைவுற்றது. ஆனால் இந்தக் கருத்துக்கள் எதுவும் முழுத் திருப்தியை அளிக்கவில்லை.

இந்தக் கருத்தை மேலும் மேலும் உயர்த்தி மேலான உருவத்தையும் அளித்தார்கள் முதலில் அந்தப் பரமாத்மா ஒருவரே இருந்தார். அவரே இந்தப் பிரபஞ்சம் அனைத்திற்கும் தலைவர் இந்தப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்பவர் அவரே. ஆன்மாக்களைப் படைத்தவர் அவரே ஆற்றலுக்குக் காரணமானவர் அவர். அவரையே எல்லா தேவர்களும் வழிபடுகிறார்கள் . அவரது நிழலே வாழ்வு. அவரது நிழலே மரணம். அவரைத் தவிர வேறு யாரை நாம் வழிபட முடியும் ? யாருடைய மகிமையைப் பனி படர்ந்த இமயச் சிகரங்கள் விளங்குகின்றனவோ அலை பொங்கும் கடல் மகிமையை முழங்கு கின்றனவோ அவரைத் தவிர வேறு யாரை நாம் வழிபட முடியும் ? இப்படியே போகிறது. ஆயினும் நான் சற்று முன்பு கூறினேனே அதுதான் அவர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை.

கடைசியில் ஒரு விசித்திரமான நிலையைக் காண்கிறோம் ஆசிரியர்கள் நீண்ட காலமாக இந்தப் பிரச்சினைக்கு வெளியில் விடை தேடினார்கள். சந்திரன் சூரியன் விண்மீன்கள் என்று அவர்கள் அறிந்த அனைத்தையும் ஆராய்ந்தார்கள். அப்படி ஆராய்ந்ததில் இயற்கை முழுவதும் சேர்ந்துகூட அவர்களுக்குக் கற்பித்தது ஒரு சகுணக் கடவுளையே பிரபஞ்சத்தை ஆள்கின்ற ஒருவரையே அதற்குமேல் எதுவும் அல்ல. சிற்பி ஒருவன் அவனது கைøளிலிருந்த உருப்பெற்றது இந்தப் பிரபஞ்சம் என்ற கருத்து ஒன்றுதான் அவர்கள் இயற்கையிலிருந்து அறியக்கூடிய அது தர்க்கரீதியாக இல்லை சற்று குழந்தைத்தனமாகத்தான் உள்ளது. வெளியுலகிலிருந்து கடவுளைப்பற்றி நாம் அறிய முடிகின்ற ஒரே கருத்து , இந்தப் பிரபஞ்சத்தை உண்டாக்க ஒருவர் வேண்டும் என்பது தான் . ஆனால் இது பிரபஞ்சத்திற்கு விளக்கமாகாது.

இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு வேண்டிய சாதனைகள் கடவுளுக்கும் முன்பே இருந்திருக்கின்றன அந்தக் கடவுளுக்கும் உலகத்தைப் படைப்பதற்கு அவை தேவையாக இருந்திருக்கின்றன. எனவே அவர் அந்தச் சாதனங்களால் கட்டுப்படுத்தப்ட்டவர் அதாவது எல்லைக்கு உட்பட்டவர் என்ற பெரிய மறுப்பு எழுகிறது வீடு கட்டுபவன், கட்டுவதற்கு வேண்டிய பொருட்கள் இல்லாமல் எப்படி வீடு கட்டுவான் ஆகையால் அவன் அந்தச் சாதனங்களுக்குக் கட்டுப்பட்டவனாகிறான் அவற்றைக் கொண்டு என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் தான் அவன் செய்யக்கூடும் ஆகவே ஒழுங்குமுறை படைப்புத் திட்டத்திலிருந்து கிடைக்கும் கடவுள் மிஞ்சிப்போனால் ஒரு சிற்பி அதிலும் கட்டுக்கு உட்பட்ட சிற்பி மட்டும்தான். அவர் பிரபஞ்ச மூலப் பொருட்களால் கட்டுண்டு எல்லைக்கு உட்பட்டவராக இருக்கிறார். அவருக்கச் சுதந்திரம் இல்லை இதுவரை அவர்கள் ஏற்கனவவே கண்டுபிடித்துவிட்டனர் பலர் இத்துடன் நிறுத்தியிருப்பார்கள், ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை.

மற்ற நாடுகளிலும் இம்மாதிரியேதான் நடந்தது, மனிதமனம் அவ்வளவு எளிதாக நின்றுவிடாது அல்லவா! நல்ல சிந்தனைச் சக்தி வாய்ந்தவர்கள். மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்க விரும்பினார்கள். ஆனால் அவ்விதச் சக்தியில்லாதவர்கள் அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்தார்கள். நல்ல காலமாக இந்த இந்து ரிஷிகளை அப்படித்தலையில் அடித்து யாரும் நிறுத்தி விட முடியாது அவர்கள் தங்கள் கேள்விக்கு விடை கண்டே தீர வேண்டும் என்று விரும்பினார்கள். இப்பொதழுது அவர்கள் புற உலகை விட்டு அகவுலகில் புகுவதைக் காண்கிறோம்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,