எனது சிந்தனைகள் (பகுதி-4)


எனது சிந்தனைகள் (பகுதி-4)---சுவாமி விவேகானந்தர்

அந்தப் பண்டிதர்கள் பூர்வ மீமாம்ச சாஸ்திரங்களை மிக நன்றாகக் கற்றவர்கள் என்பதை, அவர்கள் சென்ற பிறகு சீடர் சுவாமிஜியிடமிருந்து தெரிந்து கொண்டார். சுவாமிஜி வேதாந்தமாகிய உத்தர மீமாம்ச தத்துவத்தை எடுத்துக் கூறிஞான நெறியே உயர்ந்தது என்பதை விளக்கினார். பண்டிதர்கள் அவர் கூறியதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

தமது தவறுக்காக பண்டிதர்கள் சிரித்ததைப்பற்றிக் குறிப்பிட்ட சுவாமிஜி, தாம் பல வருடங்கள் சம்ஸ்கிருத மொழியைப் பேசாததால் தான் அந்தத் தவறு ஏற்பட்டது என்று கூறினார். அந்தப் பண்டிதர்களைச் சிறிதும் அவர் குறை கூறவில்லை. விவாதத்தின் போது முக்கியப் பொருளிலிருந்து விலகி இலக்கணப் பிழை ஒன்றிலுள்ள குற்றத்தைக் காட்ட முயல்வதை மேலை நாட்டினர் நாகரீகக் குறைவாகக் கருதுவார்கள் என்பதைத் தெரிவித்தார். பின்னர் நாகரீகம் படைத்தவர்கள் கருத்தைப் பார்ப்பார்களே, தவிர மொழியழகைப் பார்ப்பதில்லை. ஆனால் உங்கள் நாட்டில் அரிசியைப் பார்க்காமல் உமியைப்பற்றிதான் சண்டைபோடுவது வழக்கம் என்று சொல்லிவிட்டுச் சீடருடன் சம்ஸ்கிருதத்தில் உரையாட ஆரம்பித்தார். சீடரும் ஓரளவு சம்ஸ்கிருதத்தில் மறுமொழி கூறினார். இருப்பினும் சுவாமிஜி அவரை ஊக்குவிப்பதற்காகப் புகழ்ந்து பேசினார். அன்று முதல் சுவாமிஜி கூறியதற்கிணங்கச் சீடர் சுவாமிஜியுடன் அவ்வப்போது சம்ஸ்கிருதத்தில் பேசுவார்.

நாகரீகம் என்பது என்ன, என்ற கேள்விக்கு வடை யாக சுவாமிஜி அன்று பின்வருமாறு கூறினார்:

ஆன்மீகத்தில் ஒரு நாட்டினர் அல்லது சமுதாயத்தினர் முன்னேறி இருக்கும் அளவிற்கு அவர்களது நாகரீகமும் உயர்ந்ததாக உள்ளது. பல எந்திரங்களையும், அது போன்ற பிறவற்றையும் கொண்டு வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்டதால் மட்டும் ஒரு நாட்டினரை நாகரீகம் படைத்தவர்கள் என்று கூறிவிட முடியாது இந்தக் காலத்து மேலை நாகரீகம் நாள்தோறும் மக்களின் தேவைகளையும் துன்பங்களையும்தான் பெருக்கிகொண்டு போகிறது. மாறாக பழைய இந்திய நாகரீகம் ஆன்மீகம் முன்னேற்றத்திற்குரிய வழிகளைக் காட்டியதன் மூலம் உலகியல் தேவைகளை முற்றிலுமாக நீக்காவிட்டாலும் பெருமளவிற்குக் குறைத்தது. இந்த இருவகை நாகரீகத்தையும் சமன்படுத்துவதற்காகவே இந்த யுகத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றினார். இன்று மனிதர்கள் செயல்புரிவதில் வல்லவர்களாக இருப்பதுடன் ஆழ்ந்த ஆன்மீக ஞானத்தையும் அடைய வேண்டியிருக்கிறது.

இந்திய நாகரீகம், மேலை நாகரீகத்துடன் இணைவதால் உலகில் ஒரு புது யுகம் தோன்றும் என்பதை சுவாமிஜி விளக்கலானார்:

நல்லது, இன்னொரு விஷயம் ஒருவன் ஆன்மீக வாழ்வில் ஈடுபடுந்தோறும் அவன் பிறரிடமிருந்து ஒதுங்கிவிட வேண்டும் என்றும் பிற விஷயங்களைப்பற்றி அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரக் கூடாது என்றும் மேலை நாட்டினர் எண்ணுகின்றனர். எனதுசொற்பொழிவுகளில் பரந்த கருத்துக்களைக் கண்ட பாதிரிகள் மிகவும் வியந்தனர்: சொற்பொழிவின் முடிவில் நான் நண்பர்களுடன் பேசிச் சிரிப்பதைக் கண்டு மலைத்தேவிட்டனர். அவர்களுள் சிலர் என்னிடம் வந்து நேராகவே சுவாமி, நீங்கள் ஒரு குரு சாதாரண மனிதர்களைப் போல் சிரிக்கவும் விளையாடவும் கூடாது. இந்த விளையாட்டுத்தனம் உங்களுக்கு ஏற்றதல்ல என்று கூறினார்கள். அதற்கு நான் அவர்களிடம் , நாங்கள் ஆனந்தத்தின் குழந்தைகள், கவலை தோய்ந்த முகத்துடனும் சிடுசிடுப்பாகவும் ஏன் இருக்க வேண்டும் ? என்று கூறினேன் என் வார்த்தைகளின் பொருளை அவர்கள் சரியாகப் புரந்துகொண்டார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

அன்று சுவாமிஜி பாவசமாதி நிர்விகல்ப சமாதி பற்றி எல்லாம் பல விஷயங்களைக் கூறினார். என்னால் முடிந்தவரை அவற்றைக் கீழே தருகிறேன்:

ஒருவன் அனுமனைப்போல் பக்தியை வளர்த்துக் கொள்வதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பக்தி பாவனை தீவிரமாகுந்தோறும் அவனது மனநிலையும் நடவடிக்கைகளும் மட்டுமல்ல, உடல் கூட அவன் பக்தி செலுத்துபவரைப்போல் மாறத் தொடங்கிவிடும். ஓர் உயிரினம் மற்றொன்றாகப் பரிணமிக்கும் முறையும் இதுவே. இவ்வாறு பக்தன் ஏதாவது ஒரு பாவனையை ஏற்றுக்கொண்டு, படிப்படியாக இஷ்ட தெய்வத்தின் வடிவமாகவே ஆகிவிடுகிறான். ஒரு பாவனையின் இறுதி நிலையையே பாவ சமாதி என்கிறோம். ஞானநெறி சாதகன் நேதி நேதி என்னும் பாதையைப் பின்பற்றுகிறான் அவன் நான் இந்த உடலல்ல,மனமல்ல புத்தியல்ல என்று பழகி நிர்விகல்ப சமாதியை அடைகிறான். அப்போது அவன் தனியுணர்வில் நிலைபெறுகிறான் பக்தி நெறிகளின் வழியாக நிறைநிலையை அதாவது இறுதி நிலையை அடைவதற்கு எத்தனையோ பிறவிகள் தேவையாக இருக்கிறது. ஆன்மீகபாவனை சாம் ராஜ்யத்தின் மன்னரான ஸ்ரீராமகிருஷ்ணரோ பதினெட்டிற்குக் குறையாத பாவனைகளுள் அறுதி நிலையை அடைந்திருந்தார்.பாவமுகத்தில் இருந்திருக்காவிட்டால் தமது உடல் அழிந்துவிட்டிருக்கும் என்று அவர் கூறுவதுண்டு.

அன்றுசீடர் சுவாமிஜியிடம், சுவமாஜி நீங்கள்மேலைநாட்டில் எந்த வகையான உணவு உட்கொண்டீர்கள்? என்று கேட்டார்.

சுவாமிஜி: அங்குள்ளவர்கள் உண்ணும் அதே உணவைத்தான் . நாங்கள் துறவிகள் எங்கள் ஜாதியை எதுவும் அழிக்க முடியாது.

இந்த நாட்டில் சுவாமிஜியின் எதிர்காலப் பணி எவ்விதம் நடக்கப்போகிறது என்பதற்கு சுவாமிஜி கீழ்வருமாறு கூறினார்.

சென்னையிலும் கல்கத்தாவிலும் இரண்டு மையங்களை உருவாக்க வேண்டும். எல்லா துறைகளிலும் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய புதுவிதமான துறவிகளை உருவாக்க வேண்டும். இருப்பதை அழிக்கும் முறையால் சமுதாயமோ நாடோ எந்தவிதத்திலும் முன்னேறுவதில்லை. ஆக்கபூர்வமான முறைகளால்தான் அதாவது ஏற்கனவே இருக்கும் வழக்கங்களுக்கும் நெறிகளுக்கும் புத்துருவம் கொடுப்பதன் மூலம்தான் முன்னேற்றம் என்பது எல்லாகாலங்களிலும் அடையப்பட்டிருக்கிறது. பண்டைய இந்தியாவின் சமயப் பிரச்சாரகர்கள் அனைவரும் அந்த வழியிலேயே முயன்றனர். பகவான் புத்தரின் மதம் மட்டுமே அழிவுபூர்வமாக இருந்தது. அதனால் அது இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டும் விட்டது.

இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது சுவாமிஜி கீழே வருவனவற்றையும் கூறியதாகச் சீடருக்கு ஞாபகம் இருக்கிறது.

பிரம்மம் ஒரு மனிதனிடம் வெளிப்பட்டால் அந்த ஒளி காட்டும் வழியால் பல்லாயிரக்கணக்கானோர் முன்னேறுவர். பிரம்ம ஞானிகள் மட்டுமே மனித குலத்திற்கு ஆன்மீக வழிகாட்டிகளாக இருக்க முடியும். எல்லா சாஸ்திரங்களும் ஆராய்ச்சியும் இதையே நிரூபிக்கின்றன. சுயநலம் பிடித்த பிராமணர்களே பரம்பரை குரு என்ற முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தினார்கள். இது வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் எதிரானது. அதனால் தான் ஆன்மீக சாதனைகளால் கூட மனிதனால் நிறைநிலையை அடையவோ பிரம்மஞானம் பெறவோமுடியவில்லை. மதத்தில் ஏற்பட்ட இத்தகைய தவறுகளை நீக்குவதற்காகவே இறைவன் இந்த யுகத்தில் ஸ்ரீராமகிருஷ்ணராகப் பூமியில் பிறந்தார். அவரது சமரச போதனைகள் உலகம் முழுவதும் பரவுமானால் அதனால் மனித குலத்திற்கே, உலகிற்கே பெரும் பயன் விளையும் இவ்வளவு அற்புதமாகச் சமயசமரசத்தை நிலைநாட்டிய ஒருவரை இந்தியா கடந்த பல நூற்றாண்டுகளாக உருவாக்கவில்லை.

அப்போது சுவாமிஜியின் சகோதராச் சீடர் ஒருவர் அவரிடம், நீங்கள் ஏன் ஸ்ரீராமகிருஷ்ணரை அவதார புருஷரென மேலை நாட்டில் பிரச்சாரம் செய்யவில்லை? என்று கேட்டார்.

சுவாமிஜி: அவர்கள் தங்கள் விஞ்ஞானத்தையும் தத்துவத்தையும் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்கிறார்கள். நியாயம் விஞ்ஞான பூர்வமான வாதம் தத்துவ ஆராய்ச்சி இவற்றின் மூலம் அவர்களது அறிவுச் செருக்கைத் தகர்த்து எறியாமல் அங்கு ஒன்றையும் நீங்கள் உருவாக்க முடியாது . முடிந்தவரை அறிவால் ஆராய்ந்தும் ஒன்றும் காணாமல் உண்மையை உணர வேண்டும் என்னும் ஆழ்ந்த ஆர்வத்துடன் என்னிடம் வருபவர்களிடம் நான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிப் பேசுவதுண்டு. மாறாக எடுத்தவுடனேநான் அவதாரங்களைப்பற்றிப் பேசத் தொடங்கினால் , நீங்கள் சொல்வதில் புதியது ஒன்றுமில்லை அவரைப். போன்ற ஏசு எங்களிடம் உள்ளார் என்று அவர்கள் கூறி விடுவார்கள்.

இவ்வாறு மூன்று நான்கு மணி நேரங்களிலும் மிகவும் மகிழ்ச்சியுடன் கழித்துவிட்டு சீடரும் மற்றவர்களும் கல்கத்தா திரும்பினார்கள்.

சுவாமிஜி முதன்முறையாக இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய போது ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆலம்பஜார் என்ற இடத்தில் இருந்தது. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்தநாள் விழா இந்த ஆண்டு தட்சிணேசுவரத்திலுள்ள ராணி ராசாமணியின் காளி கோயிலில் கொண்டாடப்படும் . காலை ஒன்பது மணியளவில் சுவாமிஜி தம் சகேதரச் சீடர்கள் சிலருடன் ஆலம்பஜார் மடத்திலிருந்து அங்கு வந்தார். அவர் நெருப்பு அணியவில்லை,மஞ்சள் தலைப்பாகை அணிந்திருந்தார். அவரைக் காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் மக்கள் பெரும் கூட்டமாகக் காத்திருந்தனர். காளிகோயிலுக்குள் வந்ததும் காளிதேவின் முன் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினார் அவர். சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அவரைத் தொடர்ந்து தேவியைத் தலைதாழ்த்தி வணங்கினர். பிறகு ராதா காந்தரை வணங்கிவிட்டு ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்த அறைக்கு வந்தார். மூச்சுவிடக்கூட இடம் இல்லாமல் மக்கள் அந்த அறைக்குள் நிறைந்திருந்தனர்.

சுவாமிஜியுடன் இந்தியா வந்த இரண்டு ஐரோப்பியப் பெண்களும் இந்த விழாவிற்கு வந்திருந்தனர். சுவாமிஜி அவர்களை அழைத்துச் சென்று புனிதமான பஞ்சவடியையும், வில்வ மரத்தையும் காட்டினார்.

சீடர் இன்னும் சுவாமிஜியுடன் நெருங்கிப் பழக வில்லை என்றாலும் அவரைப் பின்தொடர்ந்து சென்று அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் விழாவைப் பற்றி சம்ஸ்கிருதத்தில் தாம் இயற்றிய பாடல் ஒன்றைஅவரிடம் கொடுத்தார் . பஞ்சவடியை நோக்கி நடந்தபடியே சுவாமிஜி அதைப் படித்தார். பின்னர் சீடரின் பக்கம் திரும்பி பாடல் நன்றாக இருக்கிறது இன்னும் இதுபோல் எழுது என்றார்.

பஞ்சவடியின் ஒரு பக்கத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்கள் கூடியிருந்தனர். கிரீஷ் சந்திரகோஷும் இருந்தார். பெரிய கூட்டம் தன்னைச் சூழ்ந்துவர சுவாமிஜி கிரீஷ்பாபுவிடம் வந்து கிரீஷ்பாபு இங்கே இருக்கிறார் என்று கூறி அவரை வணங்கினார் , தாங்கள் அங்கே கழித்த பழைய நாட்களை நினைவு கூர்ந்தவாறே சுவாமிஜி கிரீஷிடம், கிரீஷ்பாபு அந்த நாட்களையும் இந்த நாட்களையும் நினைத்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய மாற்றம் என்றார். கிரீஷ்பாபு சுவாமிஜியைப்போல் தாமும் அந்த நினைவுகளில் ஆழ்ந்தவராக ஆம் உண்மைதான் இதைவிடப் பெரிய மாற்றங்களைக் காண மனம் ஏங்குகிறது என்றார். சிறிதுநேர உரையாடலுக்குப் பிறகு சுவாமிஜி பஞ்சவடிக்கு வட கிழக்கில் நின்ற வில்வ மரத்தைநோக்கி நடந்தார்.

சுவாமிஜியிடமிருந்து ஒரு சொற்பொழிவைக் கேட்க ஒரு பெரிய கூட்டம் மிகுந்த ஆவலோடு நின்றிருப்பது.சுவாமிஜி பேசத் தொடங்கினர். அவர் எவ்வளவுஉரக்கப் பேசினாலும் சுற்றிருந்த மக்கள் எழுப்பிய கூச்சலால் அவரது குரல் அனைவருக்கும் கேட்கவில்லை. அதனால் சொற்பொழிவாற்றும் முயற்சியை விட்டு விட்டு, தம் முடன் வந்த இரண்டு ஐரோப்பியப் பெண்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் தவம் செய்த இடங்களைக் காண்பிக்கவும் , ஸ்ரீராமகிருஷ்ணரின் சில பக்தர்களை அறிமுகம் செய்துவைக்கவும் அழைத்துச்சென்றார்.

பிற்பகல் மணி மூன்றைத் தாண்டியது. சுவாமிஜி சீடரிடம், நான் மடத்திற்குப் போகவேண்டும். ஒரு வண்டி கொண்டு வா என்றார் . சீடர் வண்டி கொண்டு வந்தார். சுவாமிஜி வண்டியின் ஒரு பக்கமும் சுவாமிஜி நிரஞ்ஜனானந்தரும் சீடரும் மறுபக்கமும் உட்கார்ந்து கொள்ள வண்டி ஆலம்பஜார் மடத்தை நோக்கிச் சென்றது. வழியில் சுவாமிஜி சீடரிடம், வெறும் கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வது முடியாது இதுபோன்ற விழாக்களும் மற்றவையும் அவசியம். அப்போதுதான் அந்தக் கருத்துக்கள் படிப்படியாக மக்களிடையே பரவும். இந்துக்கள் ஆண்டு முழுவதும் விழாக்களை வைத்திருப்பதைப் பார் மதத்தின் பெரிய தத்துவங்களைப் படிப்படியாக மக்களின் மனத்தில் புகுத்துவதுதான் அவற்றின் ரகசியம். ஆனால் இந்த விழாக்களால் தீமையும் இருக்கவே செய்கிறது. பொதுவாக மக்கள் இந்த விழாக்களின் உட்பொருளை விட்டுவிட்டு வெறும் வெளிக்கொண்டாட்டங்களில் மூழ்கிவிடுகிறார்கள். விழாக்கள் முடிந்தபின் மறுபடியும் முன்போலவே ஆகிவிடுகிறார்கள். எனவே உண்மையான ஆன்மீகத்தையும் ஆன்ம ஞானத்தையும் மறைக்கின்ற திரையாக இந்த விழாக்கள் ஆகிவிட்டன என்பதும் உண்மைதான்.

ஆனால், மதம், ஆன்மா, என்பவற்றைச் சிறிது கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், இத்தகையவிழாக்கள் மூலமும் சடங்குகள் மூலமும் படிப்படியாக அந்த உண்மைகளை உணர்ந்து கொள்ள முயல்கிறார்கள். இன்றைய விழாவையே எடுத்துக் கொள் இதில் கலந்து கொண்டவர்கள் ஒரு முறையாவாது ஸ்ரீராமகிருஷ்ணரை நினைத்திருப்பார்கள். யார் பெயரால் இவ்வளவு மக்கள் கூடுகிறார்கள், ஏன் கூடுகிறார்கள் என்ற எண்ணங்கள் அவர்கள் மனத்தில் தோன்றும் அந்த அளவு அவரைப் பற்றி நினைக்காதவர்கள்கூட ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விழாவில் நடக்கும் பக்திப் பாடல்களையும் ஆடலையும் கேட்பார்கள், காண்பார்கள். இல்லையென்றால் பிரசாதமாவது உண்பார்கள். ஸ்ரீராமகிருஷ்ணரினக பக்தர்களைக் காண்பார்கள். இது அவர்களுக்கு நன்மை செய்யுமே தவிர எவ்விதத் தீமையையும் செய்யாது.

சீடர்: ஆனால் இந்த விழாக்களும் சடங்குகளுமே எல்லாம் என்று நினைப்பவர்கள் முன்னேறுவார்களா? அவர்களும் படிப்படியாக சஷ்டி மங்கள சண்டி போன்ற தேவதைகளை வழிபடுகின்ற சாதாரண நிலைக்கு வந்து விடுவார்கள். சாகும் வரை மக்கள் இத்தகைய சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள். இந்தச் சடங்குகளின்மூலம் பிரம்மஞானத்தை அடையும் ஒருவரைக்கூடக் காணமுடியவில்லை!

சுவாமிஜி:ஏன் காண முடியாது? இந்தியாவில் மகத்தான ஆன்மீக வீரர்கள் பிறந்தார்கள்.அவர்கள் ஆன்மீகத் தின் உச்ச நிலைகளில் திளைக்க இவை கருவிகளாக இருக்க வில்லையா? இவற்றைப் பின்பற்றி ஆன்ம ஞானத்தைப் பெற்ற பின்னர் அவர்கள் இவற்றைப் பொருட்படுத்த வில்லை. எனினும் சமுதாயத்தின் சமச்சீர் நிலையைக் காப்பதற்காக அவதார புருஷர்கள் கூட இத்தகைய சடங்குகளைச் செய்கின்றனர்.

சீடர்: ஆம் வெறும் தோற்ற அளவிலாவது அவர்கள் இந்தச் சடங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.பிரம்மத்தை அறிந்தவர்களுக்கு இந்த உலகம்கூட மாயவித்தையைப் போல் பொய்யாகிவிடுகிறது. அவர்களுக்கு இதுபோன்ற புறச் சடங்குகளைப் பின்புமுடியுமா?

சுவாமிஜி : ஏன் முடியாது? உண்மை என்ற கருத்துக்கூடப் பிறவற்றைச் சார்ந்ததுதானே! காலம் இடம் மற்றம் மனிதர்களுக்கு ஏற்ப மாறுவதுதானே எனவே எல்லா சடங்குகளும் பலன் உள்ளவையே. மனிதனின் தகுதிகளுக்கு ஏற்ப அவை பலனைத் தரவே செய்கின்றன. இதையே ஸ்ரீராமகிருஷ்ணர், ஒரு தாய் பிள்ளைகளின் உடல்நிலைக்கேற்ப ஒரு மகனுக்கு மீன் வறுவலையும் இன்னொருவனுக்குக் கஞ்சியையும் கொடுக்கிறார்கள்.என்று கூறுவர். 

சுவாமிஜி கூறுவதன் கருத்தை உணர்ந்து சீடர் அமைதியானார். வண்டி மடத்தை அடைந்தது. தாகத்தோடு இருந்த சுவாமிஜி மடத்திற்குள் சென்றதும் கொஞ்சம் தண்ணீர் அருந்தினார் பிறகு தாம் அணிந்திருந்த கோட்டைக் கழற்றிவிட்டு கீழே விரிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்து தலையணையின் மீது சாய்ந்து ஒய்வெடுத்தார். சுவாமி நிரஞ்ஜனானந்தர் அவரது பக்கத்தில் அமர்ந்து கொண்டு இதற்குமுன் எந்த ஆண்டு நடந்தவிழாவிலும் இவ்வளவு கூட்டம் கூடியதில்லை. கல்கத்தா முழுவதுமே திரண்டுவந்தது போல் கூட்டம் இருந்தது என்றார்.

சுவாமிஜி: ஆம் அது இயல்புதான். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான நிகழ்ச்சிகள் நடக்கும்.

சீடர்: சுவாமிஜி ஒவ்வொரு மதப் பிரிவிலும் ஏதாவது ஒருவகையில் இத்தகைய விழாக்கள் நடக்கத்தான் செய்கின்ற ஆனால் ஒரு பிரிவுடன் மற்றொன்று சேர்வது மட்டும் இல்லை. பரந்த நோக்குடைய முகமதிய மதத் தில்கூட ஷியா மற்றும் சுன்னி பிரிவினர் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை நான் டாக்காவில் கண்டேன். 

சுவாமிஜி : பிரிவுகள் உள்ள இடங்களிலுல் எல்லாம் இது ஏற்படவே செய்யும் . ஆனால் நமது அடிப்படை உணர்ச்சி என்ன தெரியுமா? பிரிவினைவாதமற்ற நிலை தான் நம் பகவான் இதை உணர்த்துவதற்காகத்தான் பிறந்தார். அவர் அனைத்து உருவங்களையும் ஏற்றுக்கொண்டார். ஆனாலும் பிரம்மஞான நிலையிலிருந்து பார்க்கும் போது அவை அனைத்து வெறும் மாயை போன்றவை என்பார் அவர்.

சீடர்: சுவாமிஜி உங்கள் கருத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தகைய விழாக்களை நடத்துவதன் மூலம். நீங்களும் ஸ்ரீராமகிருஷ்ணரை மையமாக வைத்து அவர் பெயரால் ஒரு மதப் பிரிவை உண்டாக்குகிறீர்களோ என்று எனக்குச் சிலவேளைகளில் தோன்றுகிறது. ஸ்ரீராமகிருஷ்ணர் எந்த மதப் பிரிவையும் சார்ந்தவரல்ல என்று நாகமகாசயரிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன். சாக்தம் வைணவம் பிரம்ம சமாஜம் முகமதிய மதம் கிறிஸ்தவ மதம் ஆகிய அனைத்திற்கும் மிகுந்த மரியாதை அளிப்பது அவரது வழக்கம்.

சுவாமிஜி:எங்குகளுக்கும் எல்லா மதங்களிடம் அப்படிப்பட்ட மரியாதை இல்லையென்பதா உன் எண்ணம்.

இப்படிச் சொல்லிக்கொண்டே சுவாமிஜி சுவாமி நிரஞ்ஜானந்தரைக் கூப்பிட்டு இந்த வங்காளி என்ன சொல்கிறான் பார் எனறு கேலியாகச் சொன்னார்

சீடர்: சுவாமிஜி,தயவுசெய்து உங்கள் கருத்து என்ன என்பதைப் புரிய வையுங்கள்

சுவாமிஜி: நல்லது நீ என் சொற்பொழிவுகளை நிச்சயமாகப் படித்திருக்க வேண்டும் அதில் எங்காவது நான் ஸ்ரீராகிருஷ்ணரை மையமாக வைத்து எதையாவது உருவாக்கியிருக்கிறேனா? கலப்பற்ற உபநிடத மதத்தையே நான் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்தேன்.

சீடர்: அது உண்மைதான் உங்களுடன் நெருங்கிப் பழகியதில் நான் தெரிந்துகொண்டதெல்லாம் நீங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அர்ப்பணித்து விட்டீர்கள் என்பதையே ஸ்ரீராமகிருஷ்ணர் கடவுளே என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் அதை ஏன் உலக மக்கள் அனைவருக்கும் சொல்லக் கூடாது?

சுவாமிஜி : உண்மைதான் நான் புரிந்துகொண்தை நான் உபதேசிக்கிறேன் அத்வைத வேதாந்தம் தான் மிகமிக உண்மையான மதம் என்று நீ அறிந்திருந்தால் ஏன்அதை எல்லோருக்கும் உபதேசிக்கக் கூடாது.

சீடர் :பிறகு உபதேசம் செய்யுமுன் நான் உணர்ந்து அனுபவித்து இருக்க வேண்டும் நான் அத்வைதத்தைப் படித்திருப்பதோடு சரி.

சுவாமிஜி: நல்லது முதலில் அனுபூதி பெறு: பிறகு பிரச்சாரம் செய் . ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக வைத்திருக்கம் நம்பிக்கைகளைப்பற்றி எதுவும் சொல்ல இப்போது உனக்கு உரிமை கிடையாது. ஏன் நீயும் அத்தகைய நம்பிக்கைகள் சிலவற்றைக் கடைப்பிடித்துதானே வாழ்கிறாய். 

சீடர்:உண்மைதான் நான்கூடச் சிலவற்றில் நம்பிக்கை வைத்துதான் வாழ்கிறேன். ஆனால்நான் சாஸ்திர பூர்வமானவற்றையே நம்புகிறேன், சாஸ்திரங்களுக்கு எதிரான எதையும் ஏற்றுக்கொள்ளவதில்லை.

சுவாமிஜி: சாஸ்திரம் என்று நீ எதைக் குறிப்பிடுகிறாய் உபநிடதம் என்று நீ சொன்னால் ஏன் பைபிளும், சென்ட் அவஸ்தாவும் அதிகார பூர்வமானவையாக இருக்க கூடாது.?

சீடர்:அவை அதிகரபூர்வமானவை என்றே எடுத்துக்கொண்டாலும் அவை வேதங்களைப் போன்று அவ்வளவு பழமையானவை அல்லவே மேலும் ஆன்மாவைப் பற்றிய கொள்கை தேங்களில்போல் வேறு எதிலும் அவ்வளவு உறுதியாகச் சொல்லப்படவில்லை.

சுவாமிஜி: நீ சொல்வதை நான் ஏற்றுக்கொண்டதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால் வேதங்களைத் தவிரப் பிறவற்றுள் உண்மை இல்லை என்று சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது?

சீடர்: ஆமாம்,உண்மைதான் வேதங்களில் மட்டும் அல்லாமல் மற்ற சாஸ்திரங்களிலும் உண்மை இருக்கலாம் அதற்கு எதிராக நான் ஒன்றும் சொல்லவில்லை என்னைப் பொறுத்தவரை, நான் பின்பற்றி வாழ உபநிடதங்களையே தேர்ந்தெடுத்துள்ளேன் அவற்றிடம் எனக்கு மிக ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.

சுவாமிஜி : நீ அப்படியே செய் ஆனால் மற்றவர்கள் வேறு ஏதாவது சாஸ்திரங்களில் மிக ஆழ்ந்த நம்பிக்கை வைத்தால் அதையும் நீ அனுமதிக்க வேண்டும் அப்படி அனுமதித்தால் நாளடைவில் நீங்கள் இருவரும் ஒரே லட்சியத்தை அடைவதை நீயே காண்பாய். த்வமஸி பயஸாமர்ணவ இவ ஆறுகள் வந்து விழுகின்ற கடல் போன்றவன் நீ என்று சிவமஹிம்ன ஸ்தோத்திரத்தில் கூறப்படுவதை நீ படித்ததில்லையா?

சுவாமிஜி இன்று சீடருக்குத் தீட்சை தரவுள்ளார் எனவே சீடர் அதிகாலையில் ஆலம்பஜார் மடத்தை அடைந்தார். அவரைப் பார்த்ததும் சுவாமிஜி மிகுந்த மகிழ்ச்சியுடன் நீ வந்துவிட்டாயா? இன்றைக்கு நீ பலி யாகப் போகிறாய். இல்லையா? என்றார்.

சீடரிடம் இப்படிக்கூறிவிட்டு புன்சிரிப்புடன் அருகில் இருந்தவர்களுடன் அமெரிக்கர்களைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். ஆன்மீக வாழ்க்கைபற்றியும் பேச்சு வந்தது. அப்போது எப்படி ஒருமனதான பக்தி செலுத்துவது எப்படி குருவிடம் ஆழ்ந்த நம்பிக்கையும் தீவிர பக்தியும் கொள்ள வேண்டும், அவருக்காக வாழ்க்கையையே எப்படி அர்ப்பணிக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் சுவாமிஜி பேசினார். பிறகு சீடரிடம் சில கேள்விகளைக் கேட்டு அவருடைய உள்ளத்தைச் சோதிக்கத் தொடங்கினார். ஆமாம் என்ன நேர்ந்தாலும் எதுவாக இருந்தாலும் என் கட்டளையே உன்னால் இயன்றவரை பின்பற்றி நடப்பாயா உனது நன்மைக்காக கங்கையில் குதிக்கவோ மாடியிலிருந்து குதிக்கவோ சொன்னால் சிறிதுகூடத் தயக்கம் இல்லாமல் அவற்றைச் செய்வாயா? நினைத்துப் பார். உன் முடிவை மாற்றிக் கொள்ள இப்போது கூட நேரமிருக்கிறது. உணர்ச்சிவேகத்தில் என்னைக் குருவாக ஏற்றுக்கொள்ள அவசரப்படாதே.

சுவாமிஜி கேட்ட இதுபோன்ற எல்லா கேள்விகளுக்கும் சீடர் தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.

சுவாமிஜி தொடர்ந்தார்; முடிவில்லாத பிறப்பு இறப்பு ஆகிய இந்த மாயைக்கு அப்பால் உன்னை அழைத்துச் செல்வதற்காக கருணையுடன் உன் மன நோய்களை எல்லாம் அழிப்பவரே உண்மை குரு. பண்டைய பநாட்களில் சீடன் கையில் சமித்துடன் குருவின் ஆசிரமத்திற்குச் செல்வான் அவன் தகுதியானவன் என்று அவர் கண்டால் அவனுக்குத் தீட்சை அளித்து வேதங்களை உபதேசிப்பார் உடம்பு மனம் சொல் ஆகிய மூன்றையும் அடக்கவேண்டும் என்பதற்காக முஞ்சா என்னும் புல்லால் மூன்றாக முறுக்கப்பட்டுக் கட்டிய நூலை அவனது இடுப்பைச் சற்றி கட்டுவார் அவன் இதில்தான் கோவணத்தைக் கட்டிக் கொள்வான் . பிற்காலத்தில் இதுவே பூணூல் அணியும் முறையாக மாறியது.

சுவாமிஜி:பூணூல் அணிவது பற்றி வேதங்களில் எங்குமே குறிப்பிடப்படவில்லை தற்கால ஸ்மிருதியைஎழுதிய ரகுநந்தன பட்டாச்சாரியர் கூட ஓரிடத்தில் இந்த நிலையில் பூணூலை அணிந்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறார் . கோபிலரின் கிருஹ்ய சூத்திரத்திலும் நூலால் செய்யப்பட்ட பூணூலை ப்பற்றிப் பேசப்படவே இல்லை முதல் வைதீகச் சடங்காகிய இது குருவின் முன்னிலையில் நடைபெறும் உபநயனம் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நம் நாடு இப்போது அடைந்திருக்கும் பரிதாப நிலையைப் பார். சாஸ்திரங்களின் உண்மையான பாதையை விட்டு விலகி வட்டார வழக்கங்களும் பெண்களின் பழக்கங்களும் நாட்டில் நிறைந்துவிட்டன. அதானால்தான் உன்னைப் பழங்கால சாஸ்திரங்களின் வழியில் நடக்கச் சொல்கிறேன். உன்னிடம் அளவற்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள் பிறகு அதனை நாட்டிற்கு வழங்கு. நசிகேதன் கொண்டிருந்தது போன்ற சிரத்தை உன் மனத்தில் இருக்கட்டும் வேண்டுமானால் அவனைப் போல் எமலோகத்திற்குச் செல்லவும் தயங்காதே. ஆன்ம ரகசியத்தை அறிவதற்காக ஆன்ம முக்திக்காக பிறப்பு இறப்பு என்னும் புதிருக்கு உண்மையான தீர்வைக் காண்ப தற்காக நீ மரணத்தின் கொடிய பற்களுக்கு நடுவிலும் அச்சம் சிறிதும் இல்லாமல் செல்ல வேண்டும். அச்சமே மரணம் . நீ எல்லா அச்சங்களையும் கடந்து செல்ல வேண்டும். எனவே இன்றிலிருந்து அச்சமற்றவனாக இரு

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,