எனது சிந்தனைகள் 1


எனது சிந்தனைகள் (பகுதி-1) ----சுவாமி விவேகானந்தர்
-------------------
பாக் பஜாரில் காலம் சென்ற பிரியநாத் முகோபாத்யாயரின் வீடு(1897): சுவாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பி வந்து, கல்கத்தாவில் தமது திருவடிகளை வைத்து மூன்று நாட்கள் ஆகியிருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு அவரது தெய்வீக சான்னித்தியத்தை அனுபவிக்கும் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களின் மகிழ்ச்சி கரை கடந்ததாக இருந்தது. அவரை தங்கள் வீடுகளுக்கு அழைத்து சென்று விருந்தளிப்பதை பெரும்பேறாக எண்ணி அவரை அழைத்தார்கள்.

இன்று பிற்பகல் அவர் பாக்பஜார் பகுதியில் ராஜ்வல்லப பாராவில் உள்ள ஸ்ரீராம கிருஷ்ண பக்தரான பிரியநாத் முகோபாதயாயரின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் வரும் செய்தியை அறிந்து பல பக்தர்கள் அங்கே கூடி இருந்தார்கள். சீடரும் விவரம் அறிந்து பிற்பகல் சுமார் இரண்டரை மணிக்கு அந்த வீட்டை அடைந்தார். அவர் சுவாமிஜியை சந்தித்ததே இல்லை. இதுவே முதல் சந்திப்பு. சுவாமி துரீயானந்நதர் சீடரை சுவாமிஜியிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார். சுவாமிஜி மடத்திற்கு வந்த பிறகு, சீடர் ராமகிருஷ்ணரின் மீது எழுதிய துதிப்பாடல் ஒன்றைப்படித்திருந்ததால், அவர் சீடரைப்பற்றி முன்பே அறிந்திருந்தார். மேலும் ராமகிருஷ்ணரின் மிக நெருங்கிய சீடர்களுள் ஒருவரான நாகமகாசயரிடம் சீடருக்கு மிகுந்த தொடர்பு உண்டு என்பதையும் சுவாமிஜி அறிந்திருந்தார்.

சீடர் சுவாமிஜியின் முன் விழுந்து வணங்கி, எதிரில் அமர்ந்ததும், சுவாமிஜி அவரிடம் சமஸ்கிருதத்தில் பேசத் தொடங்கினார். நாகமகாசயரின் உடல் நலத்தை விசாரித்தார். பின்னர் அவரது அசாதரணமான தியாக சிந்தையையும், பக்திப் பேருணர்வையும், பணிவையும் பற்றிப் பேசினார். அப்போது, "வயம் தத்வான்வேஷாத் ஹதா: மதுகர த்வம் கலு க்ருதீ- வண்டே! நாங்கள் மெய்ப்பொருளைத் தேடி வீணானோம். நீதான் வெற்றி பெறும் பேற்றை உண்மையில் பெற்றாய். என்று சீடர் கூறினார். பிறகுஅவர் சீடரிடம், தாம் கூறியவற்றை நாகமகாசயருக்கு எழுதி அனுப்பும் படி கூறினார்.
அங்கிருந்து பெரிய கூட்டத்தில் சீடரிடம் தனித்து பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்கவ சுவாமிஜி, சீடரையும் சுவாமி துரீயானந்தரையும் அந்த இடத்திற்கு மேற்கே இருந்த ஒரு சிறிய அறைக்குள் அழைத்து சென்றார். சீடரை நோக்கி, சங்கரர் இயற்றிய விவேக சூடாமணியில் இருக்கும் பின் வரும் ஸ்லோகத்தை கூறினார்.

"
மா பைஷ்ட வித்வம்ஸ்தவ நாஸ்த்யபாய:
ஸம்ஸார ஸிந்தோஸ்தரனே அஸ்த்யுபாய:
ஏனைவ யாதா யதயோஸ்ய பாரம்
தமேவ மார்கம் தவ நிர்திசாமி.

-
ஞானியே! பயப்படாதே. நீர அழிய மாட்டாய். இந்தப்பிறப்பு இறப்பாகியகடலைக் கடப்பதற்கு வழி இருக்கிறது. உலகைத்துறந்த மகான்கள் எந்த வழியால் அதைக்கடந்தார்களோ அந்த வழியை உனக்கு காட்டுகிறேன். பிறகு அவர் சீடரிடம் விவேகசூடாமணியைப் படிக்கும்படி கூறினார்

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,