வேதாந்தமும் இந்திய வாழ்க்கையில் அதைச் செயல்முறைப் படுத்தலும்(பகுதி-2)


வேதாந்தமும் இந்திய வாழ்க்கையில் அதைச் செயல்முறைப் படுத்தலும்(பகுதி-2)
இரண்டாவதாக இன்னுமொரு சிக்கல் இருக்கிறது. நமது சாஸ்திரங்கள் எண்ணற்றவை. சாம வேதத்திற்கு ஆயிரம் கிளைகள் இருந்தாக இலக்கண நூலாகிய பதஞ்ஜலி மகா பாஷ்யத்தில் படிக்கிறோம். அவையெல்லாம் என்னவாயின ? யாருக்கும் தெரியாது ஒவ்வொரு வேதத்தின் விஷயமும் அப்படியே. இந்த நூல்களில் பெரும் பகுதி மறைந்து விட்டது, சிறிய பகுதிகளே நமக்குக் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட சில குடும்பங்கள் அவற்றைதங்கள் பொறுப்பில் பாதுகாத்து வந்தன. இந்தக் குடும்பங்கள் மரணத்தைத் தழுவின; அல்லது அன்னியர் கொடுமையின் கீழ் கொல்லப்பட்டன, அல்லது வேறு எந்த விதத்திலோஅழிய நேர்ந்தது. அவற்றுடன் அவை பாதுகாத்து வந்த வேதப் பகுதிகளும் அழிந்துவிட்டன.இந்த உண்மை நாம் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும் ஏனெனில் புதிதாக ஒன்றைப் போதிக்க விரும்புகின்றஒரு கொள்கையைக் கூற ஏன் வேதங்களையே எதிர்க்கின்ற ஒரு கொள்கையையைக் கூற எண்ணுபவர்களுக்கும் கூட இந்த உண்மை, இந்த வாதம் தான் ஒரு துருப்புச் சீட்டாக இருந்து வருகிறது. ஏதோவொரு வட்டார வழக்கத்திற்கும் வேதங்களுக்கும் முரண்பாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு , அந்த வட்டார வழக்கம் வேதங்களுக்கு எதிரானது என்பது சுட்டிக்காட்டப்பட்டால் உடனே இந்த வாதம் தான் முன்வைக்கப்படுகிறது-அதாவது அவற்றிக்கிடையில் முரண்பாடு எதுவும் இல்லை இந்தக் குறிப்பிட்ட வாதம்பற்றிக் காணப்பட்ட வேதப் பகுதி அழிந்து விட்டது, உண்மையில் காணப்பட்ட வேதப்பகுதி அழிந்துவிட்டது, உண்மையில் இந்த வழக்கமும் நிலவிய வந்தது என்று கூறிவிடுவார்கள்.

நமது சாஸ்திங்ரகளின் இத்தகைய மாறுபட்ட பாட பேதங்கள், விளக்கவுரைகள் இவற்றிக்கு நடுவில் இவை அனைத்தின் ஊடேயும் இவை அனைத்தையும் கோர்த்தபடிச் செல்கின்ற அடிப்படைக் கருத்தைக் கண்டுபிடிப்பது மிகச் சிரமமான காரியம்தான் ஆனால் மாறுபட்ட இந்த எல்லா பிரிவுகளுக்கும் உட்பிரிவுகளுக்கும் அடிப்படையாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இந்தச் சிறுசிறு கட்டிடங்கள் அனைத்தும் ஒரு பொது அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்க வேண்டும். இவையனைத்துள்ளும் ஓர் இயைபு நிலவ வேண்டும், சீர் செய்ய முடியாதது போல் தோற்றம் அளிக்கின்ற, நாம் நமது மதம் என்று அழைக்கின்ற இந்தக் குழப்பக் குட்டைக்கு ஏதோவோர் அடிப்படை ஒழுங்கு இருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது இல்லாவிடில் இது இவ்வளவு காலம் நிலைத்து நின்றிருக்க முடியாது; இவ்வளவு காலம் தாக்குப்பிடித்திருக்க முடியாது.

இனி நம் உரையாசிர்களிடம் வருவோம் அங்கேயும் ஒரு சிக்கல் தெரிகிறது. அத்வைத உரையாசிரியர் என்ன செய்கிறார்? அத்வைதப் பகுதி வரும் போது அதை அப்படியே வைத்துக் கொள்கிறார் ஆனால் துவைதப் பகுதி வருமானால் அதே உரையாசிரியர், அவரால் முடியுமானால் அந்தப் பகுதியைப் பிரித்தும் திரித்தும் மிகவும் அசம்பாவிதமாகப் பொருள் கூறுகிறார். பிறப்பற்றது சில இடங்களில் ஆடு என்றாகிவிடுகிறது, இத்தகைய வினோத மாற்றங்களை எல்லாம் நாம் காண முடியாது.உரையாசிரியர் தமக்கு ஏற்றவாறு பொருள் தருவதற்காக, பிறப்பற்றது என்ற பொருள்தருகின்ற அஜ; என்ற வார்த்தையை, பெண் ஆடு என்று பொருள்படுகின்ற அஜா என்ற வார்த்தையாகத் கொள்கிறார்.

இதைவிட மோசமாக இல்லை யென்றாலும், இவ்வாறுதான் துவைத உரையாசிரியர்களும் வேதப் பகுதிகளைக் கையாள்கிறார்கள்.துவைதப் பொருள் கொடுக்கும் பகுதிகளை அப்படியே வைத்துக்கொண்டு, அத்வைதப் பொருள்வரும் பகுதியை விருப்பம்போல் திரித்துப் பொருள் தருகிறார்கள்.

சம்ஸ்கிருத மொழி அவ்வளவு நுட்பமானது வேதங்கள் அவ்வளவு பழமை வாய்ந்தவை, சம்ஸ்கிருத இலக்கணம் அவ்வளவு முழுமையானது - ஒரு வார்த்தையின் பொருளைப்பற்றி யுகயுகமாக விவாதித்துக் கொண்டே இருக்கலாம். ஒரு பண்டிதர் நினைத்தால் வெறும் உளறலைக்கூட வாதத்திறமையால் மேற்கோள்களைக் காட்டியும் நியதிகளைக் கூறியும் சரியான சம்ஸ்கிருதமாகக் காட்டிவிட முடியும். உபநிடதங்களைப் புரிந்து கொள்வதில் உள்ள கஷ்டங்கள் இவை.

ஆனால் ஒரேசமயத்தில் தீவிர துவைதியாகவும் தீவிர அத்வைதியாகவும் தீவிர பக்தராகவும் தீவிர ஞானியாகவும் திகழ்ந்த ஒரு மகானுடன் வாழும் அரிய பேறு எனக்குக் கிடைத்தது. உபநிடதங்களையும் சாஸ்திரங்களையும் புரிந்து கொள்வதற்கு உரையாசிரியர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைவிடச் சிறந்த சுதந்திரமான வழி அவரிடமிருந்தே எனக்கு முதலில் கிடைத்தது. எனது கருத்தும் எனது ஆராய்சிகளின் பலனாக நான் கண்ட முடிவும்இதுதான் சாஸ்திரப் பகுதிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. எனவே அவற்றைத் திரித்துப் பொருள் கூற வேண்டுமே என்று பயப்பட வேண்டாம் ஆஹா! அந்தப் பகுதிகள் மிகவும் அழகு வாய்ந்தவை, மிகவும் அற்புதமானவை; அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல, மாறாக அவற்றிற்கு இடையில் மிகவும் ஆச்சரியமான இயைபு காணப்படுகிறது, ஒரு கருத்திலிருந்து அடுத்த கருத்திற்குப் படிப்படியாக நம்மை அழைத்துச் செல்கின்ற ஒரு பாங்கு காணப்படுகிறது. எல்லா உபநிடதங்களும் வழிபாடு போன்ற துவைதக் கருத்துக்களில் ஆரம்பித்து உன்னதமான அத்வைதத்தில் முடிவடைகின்றன என்பது நான் கண்ட உண்மை.

எனவே இந்த மகானின் வாழ்க்கையின் வாயிலாகப் பார்க்கும் போது, துவைதிகளும் அத்வைதிகளும் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டிய அவசியமில்லை என்று எனக்குத் தெரிகிறது; இருவருக்கும் இடம் உள்ளது தேசிய வாழ்க்கையில் மகத்தான இட மிருக்கிறது, துவைதி கட்டாயம் வேண்டும், அத்வைதியைப்போல் துவைதியும் நமது தேசிய மத வாழ்க்கையில் ஒன்று கலந்தவன் ஒன்றில்லாமல் மற்றது இருக்க முடியாது ஒன்று மற்றொன்றைப் பூர்த்தி செய்கிறது; ஒன்று கட்டிடம், மற்றொன்று மாடி; ஒன்று வேர், மற்றொன்று பழம். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எனவே உபநிடத வாக்கியங்களைத் திரித்துப் பொருள் கூற முயற்சிப்பது எனக்கு வேடிக்கையாகவே படுகிறது.

உபநிடதங்களின் மொழிமிகவும் அற்புதமாக இருப்பதை இப்போது நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். அவை மிகச் சிறந்த தத்துவம். அவை மனித குலத்திற்கு முக்திற்கு முக்தியின் பாதையைக் காட்டுகின்ற மிகச்சிறந்த கோட்பாடு , ஆனால் இந்த எல்லா சிறப்புக்களையும் விட உபநிடத இலக்கியம் இருக்கின்றனவே, அவை நுண்மையைப் படம் வரைந்துகாட்டுவதில் மிகச் சிறந்த ஓவியமாகத் திகழ்கின்றன. மனித மனத்தின் தனித்துவம், இந்த மனத்தின் அகவயம் உள்ளுணர்வு இந்த நூல்களில் தான் முழுவேகத்துடன் வெளிப்பட்டுள்ளன.

பொதுவாக எல்லா நாட்டு இலக்கியங்களிலும் நுண்மையின் சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கவே செய்கின்றன. ஆனால் ஏறக்குறைய அவை எல்லாமே நுண்மையைப் புற இயற்கையில் தேட முயல்கின்றன. உதாரணமாக, மில்டன் தாந்தே, ஹோமர் போன்ற எந்த மேலைநாட்டுக் கவிஞர்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களின் கவிதைகளில் நயமான நுண்மைப் பகுதிகள் உள்ளன. ஆனால் எல்லையற்ற விரிவை, எல்லையற்ற வெளியைப் புலன்களால் உணரக்கூடிய, புற இயற்கை மூலமாகத் தெளிவுபடுத்துகின்ற முயற்சியையே அந்தக் கவிதைகளுள் நாம் காண்கிறோம். நம் சம்ஹிதைகளிலும் இத்தகைய முயற்சிகளைக் காண்கிறோம். படைப்பை விவரிக்கின்ற அந்த அற்புதமான ரிக்குகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். விரிவில் நுண்மையையும், வெளியில் எல்லையற்றதையும் எட்டியிருப்பதை அவற்றுள் நாம் காண்கிறோம்.

ஆனால் எல்லையற்ற ஒன்றை இந்த வழியில் அடைய முடியாது; தங்கள் மனங்களில் உருவாகத் துடித்துக் கொண்டிருக்கின்ற கருத்துக்களை எல்லையற்ற வெளி, எல்லையற்ற விரிவு, எல்லையற்ற புற இயற்கை - இவை எவற்றாலும் வெளிப்படுத்த முடியாது என்பதை அவர்கள் வெகுவிரைவிலேயே கண்டு கொண்டனர். எனவே அவர்கள் வேறு விளக்கங்களுக்குத் திரும்பத் தலைப்பட்டனர். உபநிடதங்களின் மொழி புதிய முறையில் ஆகிவிட்டது ; பெரும்பாலும் எதிர்மறையாக, சில இடங்களில் குழப்பமாக , சில நேரங்களில் நம்மைப் புலன்களுக்கு அப்பால் அழைத்துக்கொண்டுபோய், நம்மால் உணர்ந்துகொள்ள முடியாத ஒன்றைக் காண்பித்து, புரியாவிட்டாலும் அது இருக்கிறது என்ற நிச்சயத்தை நம் மனத்தில் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என்ற நிச்சயத்தை நம் மனதில் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது . உலகின் எந்தக் கவிதை இதற்கு ஈடாகும் ? - நதத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ நாந்தி குதோள்யமக்கி:? அங்கு சூரியன் ஒளிரச் செய்ய முடியாது; சந்திரனும் நட்சத்திரங்களும் மின்னலின் ஒளியும் பிரகாசத்தை அளிக்க இயலாது. அப்படியிருக்க இந்தச் நெருப்பு என்ன செய்யும்?

உலகின் தத்துவங்களில் மிகச் சிறந்ததும் முழுமைபெற்றதுமான வெளிப்பாட்டையும் இந்துக்களின் சிந்தனை சாரத்தையும் முக்தி பற்றிய மனித குலத்தின் முழுக் கனவையும் வேறு எங்கு இவ்வளவு அழகிய மொழியில் இத்தனை அற்புத உவமையுடன் சொல்லி இருப்பதைக் காண முடியும்?

த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜா÷!

தயோரன்ய; பிப்பலம் ஸ்வாத்வத்யனச்னன் அன்யோ அபிசாகசீதி

ஸமானே வ்ரு÷ஷா நிமக்னோ நீசயா சோசதி முஹ்யமான:

ஜுஷ்டம் யதா பச்யத்யன்யமீசமஸ்ய மஹிமானமிதி வீதசோக:

ஒரு மரத்தில் அழகிய இறகுகள் கொண்ட இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று மிகுந்த நேசம் பாராட்டுகின்றன. ஒன்று பழங்களைத்தின்கிறது. மற்றொன்று உண்ணாமல் கம்பீரமாக அமைதியாக உட்கார்ந்திருக்கிறது. கீழ்க்கிளையில் அமர்ந்திருக்கும் பறவை மாறிமாறி இனிப்பும் கசப்புமான பழங்களைத் தின்பதில் அதற்கேற்ப மகிழ்ச்சியும் வேதனையும் அடைகிறது , ஆனால் மேலே அமர்ந்திருக்கின்ற மற்ற பறவையோ அமைதியாக கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. அது இனிப்பும் உண்ணவில்லை , கசப்பையும் தின்னவில்லை. எனவே சுகம் துக்கம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் மகிமையிலேயே ஆழ்ந்திருக்கிறது.

மனிதனின் நிலை இதுதான் வாழ்க்கை தரும் இனிப்பும் கசப்புமான பழங்களை உண்கிறான் பணத்தை நாடி புலனின்பங்களைத் தேடி வாழ்க்கையின் நிலையற்ற இன்பங்களைத் தேடி பைத்தியக்காரத் தனமாக வெறித்தனமாக இடையீடின்றி ஓடிக் கொண்டிருக்கிறான் சில இடங்களில் ஆன்மாவைத் தேர்ப்பாகனுக்கு புலன்களைக் கட்டுக்கடங்காத வெறி பிடித்த குதிரைகளுக்கும் உபநிடதங்கள் ஒப்பிடுகின்றன. குழந்தைகள் ஒளிமயமான இன்பக்கனவுகளில் மிதப்பதும் பின்னால் அவையனைத்தும் வீண், எனக் காண்பதும் வயதானவர்கள் தங்கள் கடந்தகாலச் செயல்களை அசைபோடுவதும் எனினும் இந்த மாய வலலையிலிருந்து வெளியேறிச் செல்ல முடியாமல் திண்டாடுவதும் நிலையற்ற இன்பங்களை நாடிஓடுகின்ற மனிதனின் வாழ்க்கை இப்படிõதான் இருக்கிறது. இதுதான் உலகம். எனினும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பொன்னான கணங்கள் வரவே செய்கின்ற ஆழ்ந்த கவலைகளின் நடுவில் இல்லை இல்லை பெருத்த மகிழ்ச்சியின் நடுவில் சில நேரங்களி ல் வருகின்றன: சூரிய ஒளியைக் மறைத்துக் கொண்டிருக்கும் மேகத்திரள் விலகுவது போல் அப்போது தோன்றுகிறது அப்பால் உள்ள ஏதோ ஒன்றின் காட்சி நம்மையும் அறியாமல் கண நேரத்திற்கு நமக்குக் கிடைத்து விடுகிறது - அப்பால் புலனின்ப வாழ்க்கைக்கு அப்பால், அப்பால் புலனின்ப வாழ்க்கைக்கு அப்பால், அப்பால் உலகின் நிலையற்ற சுக துக்கங்களுக்கும் அப்பால்,அப்பால் இயற்கைக்கு அப்பால் இவ்வுலக மறுவுலக இன்பங்களாகிய கற்பனைகளுக்கு அப்பால், புகழ், பணம், பெயர் ,சந்ததி முதலிய அனைத்து ஆசைகளுக்கும் அப்பால் உள்ள ஒளியைக் கண நேரம் பெறுகிறோம். இந்தக்காட்சியால் கண நேரம் பெறுகிறோம். இந்தக் காட்சியில் கண நேரம் பழங்களை உண்ணால் தன் மகிமையிலேயே திளைத்து கண்டு ஆனந்தமாக அமைதியாக கம்பீரமாக வீற்றிருக்கும் அந்த மற்றொரு பறவையைப் பார்க்கிறான்

கீதை (3.17) கூறுவதுபோல், யார் ஆன்மாவின் மீது அன்பு செலுத்துபவனாய், ஆன்மாவைத் தவிர வேறொன்றும் வேண்டாதவனாய்இருக்கிறானோ அவன்செய்வதற்கு என்ன வேலை இருக்கிறது ? ஏன் அடிமைபோல் என்ன வேலை இருக்கிறது ? ஏன் அடிமை போல் வேலை செய்ய வேண்டும் ? மனிதன் கண நேரம் அந்தக் காட்சி பெறுகிறான் ஆனால் அதை மறந்துவிடு கிறான், வாழ்வின் இன்பதுன்பமாகிய பழங்களை உண்கிறான் சில காலத்திற்குப் பிறகு ஒரு வேளை மீண்டும் அந்தக் காட்சி அவனுக்குக் கிடைக்கிறது அடிமேல் அடிகளை பெற்ற பின்னர் கீழ்ப்பறவை மேற்பறவையை நோக்கிச் செல்கிறது. பலமான அடி பெறுவதற்குப் பேறு பெற்றிருந்தால் தனது உயிருக்குயிராகவும் நண்பனாகவும் இருக்கும் மேற்பறவையின் அருகில் மிக அருகில் செல்கிறது. பலமான அடி பெறுவதற்குப் பேறு பெற்றிருந்தால் தனது உயருக்குயிராகவும் நண்பனாகவும் இருக்கும் மேற்பறவையிலிருந்து கிளம்புகின்ற ஒளி தனது இறகுகளையும் முழுக்காட்டிச் செல்வதை அதுகாண்கிறது. அதனை இன்னும் நெருங்க நெருங்க ஆகா மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் நெருங்கும் போது, தானே கரைந்து போவது போல் அது உணர்கிறது . மெள்ளமெள்ள அது முற்றிலுமாக மறைந்துவிடுகிறது உண்மையில் கீழ்ப்பறவை வேறல்ல; மேலே அசைந்து கொண்டிருக்கும் இலைகளுக்கு இடையில் அமைதியாக கம்பீரமாக வீற்றிருந்த அந்தமேற்பறவையின் பிரதிபிம்பமே அது எல்லாம் மேற்பறவையின் மகிமையே. அதன் மகிமையில் கலந்து இதுவும் பயமின்றி இருக்கிறது: பூரண திருப்தியும் அமைதியும் கம்பீரமும் பெறுகிறது இந்தச் சித்திரத் தின்மூலம் உபநிடதங்கள்நம்மை துவைதத்திலிருந்து அத்வைதத்தின் உச்சக் கருத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

இப்படி எண்ணற்ற உதாரணங்களைக்காட்டலாம். ஆனால் அதற்கு நேரம் இல்லை. உபநிடதங்களின் கவித்துவம், நுண்ணமையை அவை சித்தரித்துக் காட்டும் நேர்த்தி, அவற்றில் நிறைந்துள்ள உன்னதக் கருத்துக்கள் இவற்றையெல்லாம் விளக்கிக் காட்டவும் நேரமில்லை. ஆனால் ஒரு விஷயத்தை நான் சொல்லியே தீர வேண்டும் உபநிடதங்கள் வாள்முனைபோல் உங்களை ஊடுருவுகிறது ; சம்மட்டியடிபோல் உங்கள் மீது விழுகிறது. அவற்றின் பொருளில் சிறிதும் குழப்ப மில்லை அந்த இசையின் ஒவ்வொரு சந்தமும் உறுதியாக முழு இனிமையுடன் உள்ளது, வீண் வார்த்தைகள் இல்லை. தேவையற்ற வாதங்கள் இல்லை. அறிவை ஆக்கிரமிக்கின்ற சொல் அடுக்குகள் இல்லை. இழி நிலையின் எந்த அடையாளமும் இல்லை , அளவுக்கு அதிகமாக உவமை காட்டுகின்ற முயற்சிகள் இல்லை அளவுக்கு அதிகமாக உவமை காட்டுகின்ற முயற்சிகள் இல்லை உயர்வு நவிற்சி அணிகளைக் கூறி பொருளை மேலும் குழப்பி அதன் கருத்தே தொலைந்து போகும் அளவிற்குக் கொண்டுபோய், அதிலிருந்து வெளிவர வழி தெரியாமல் மனிதன் மதிமயங்கித் திகைக்கின்ற அளவிற்குச் செய்யக்கூடிய எதுவும் அவற்றில் இல்லை. அப்படிப்பட்ட எதுவும் உபநிடதங்களில் இல்லை. அவை மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்குமானால் அவற்றை உண்டாக்கிய இனம் அளவற்ற தேசிய சக்தி உடையதாகத்தான் இருந்திக்க வேண்டும்.

வலிமை, வலிமை என்பதையே உபநிடதங்களின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறுகின்ற நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் இது. நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட ஒரு பெரிய பாடம்,வலிமை வலிமை, ஓ மனிதா, பலவீனனாக இருக்காதே என்பதுதான் மனித பலவீனங்களே இல்லையா என்று மனிதன் கேட்கிறான். உண்டு என்று பதிலளிக்கின்றன உபநிடதங்கள். ஆனால் அதிக பலவீனத்தால் பலவீனத் தைப் போக்க முடியுமா? அழுக்கால் அழுக்கை போக்க முடியுமா? பாவத்தால் பாவம் தொலையுமா? பலவீனத்தால் பலவீனம் போகுமா? என்று கேட்கின்றன. ஓ மனிதா வலிமையுடன் எழுந்து நில் வலிமை பெறு என்று அவை சொல்கின்றன. உலக இலக்கியங்களுள் இதில் மட்டுமே அபீ- பயமில்லை என்ற வார்த்தை மீண்டும்மீண்டும் காணப்படுகிறது. வேறு எந்தச் சாஸ்திரத்திலும் கடவுளுக்கும் சரி மனிதனுக்கும் சரி இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.

அபீ; - பயமின்மை என் மனத்தில் இப்போது கடந்த காலக் காட்சிஒன்று விரிகிறது. மேலை நாட்டின் மாபெரும் சக்கரவர்த்தியான அலெக்சாண்டர் நம் சிந்து நதிகரையில் நின்று கொண்டிருக்கிறார். காட்டில் வசிக்கின்ற நம் துறவி ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் வயோதிகத் துறவி ஒரு வேளை எந்த உடையுமின்றி நிர்வாணமாக ஒரு கல்லின் மீது அமர்ந்திருக்கிறார். அவரது ஞானத்தைக் கண்டு வியந்துபோன சக்கரவர்த்தி அவரை கிரீசுக்கு வருமாறு தூண்டுகிறார். அதற்காகப் பொன்னும பொருளும் தருவதாக ஆசை காட்டுகிறார். ஆனால் அந்த வயோதிகரே மன்னனின் பொற்காசுகளைப் பார்த்தும், ஆசை வார்த்தைகளைக் கேட்டும் மென்மையாகச் சிரிக்கிறார், அவருடன் போக மறுத்து விடுகிறார். சக்கரவர்த்தியோ தான் அரசன் என்ற தோரனையில் நிமிர்ந்து நின்று நீ வராவிடில் உன்னைக் கொன்று விடுவேன் என்கிறார். அவ்வளவுதான் அந்தத் துறவி கொல்லென்று சிரித்தபடியே மன்னா நீ உன் வாழ்நாளில் இது போன்றதொரு பொய்யைக் கூறியிருக்கவே முடியாது. யார் என்னைக் கொல்ல முடியும்? ஜடவுலகை ஆளும் சக்கரவர்த்தியே நீயா என்னைக் கொல்லப் போகிறாய்? அது ஒரு நாளும் நடக்காது. ஏனெனில் நான் பிறப்பும் இறப்புமற்ற ஆன்மா நான் பிறந்ததும் இல்லை, இறக்கப் போவதும் இல்லை .நான் எல்லையற்றவன் எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன். நீ என்னைக் கொல்கிறேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா! என்று கேட்கிறார்.

இதுவல்லவா வலிமை இதுவல்லா வலிமை! நண்பர்களே என் நாட்டு மக்களே உபநிடதங்களை அதிகம் படிக்கப்படிக்க நான் உங்களுக்காக அதிகம் கண்ணீர் சிந்துகிறேன். வலிமை வலிமை நாம் வலிமை பெறுவதற்கான செயல்முறை வழி அவற்றுள் சொல்லப்பட்டிருக்கிறது. நமக்கு வேண்டுவது வலிமை வலிமைதான் .அதை யார் நமக்குத் தருவார்கள்? நம்மைப் பலவீனப்படுத்த ஆயிரக்கணக்கான விஷயங்கள் உள்ளன, கதைகள் வேண்டிய அளவு உள்ளன. உலகின் நூல்நிலையங்களுள் முக்கால் பங்கை நமது புராணக் கதைகளால் நிரப்பிவிடலாம். நம் இனத்தைப் பலீனப்படுத்துகின்ற அனைத்திற்கும் கடந்த ஆயிரம் வருடங்களாக நாம் இடம் கொடுத்துவிட்டோம் . எப்படி நமது தேசிய வாழ்க்கையை மேலும் மேலும் பலவீனப்படுவது என்ற ஒரே நோக்கத்துடன் அந்தக் காலகட்டத்தில் நாம் செயல்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. அதன் விளைவாக நம்மை மதிக்கத் துணிந்த ஒவ்வொருவரின் கால்களின் கீழும் வெறும் புழுக்களாகவே ஆகிவிட்டோம்.

எனவே என் அருமை நண்பர்களே உங்களுக்கு ஒருனாகிய நான் உங்களுøனேயே வாழ்ந்து இறப்பவன் என்ற முறையில் உங்களுக்குச் சொல்கிறேன்; நாம் வேண்டுவது வலிமை வலிமை ஒவ்வொன்றிலும் வலிமை வேண்டும் வலிமை தரும் பெரும் சுரங்கங்களாக உபநிடதங்கள் உள்ளன .உலகம் முழுவதற்கும் வலிமை ஊட்டுவதற்கான சக்தி அவற்றில் இருக்கின்றன. அவற்றின்மூலம் உலகம் முழுவதற்கும் புத்துயிரும் புது சக்தியும் எல்லா மதங்களிலும் எல்லா இனங்களிலும் உள்ள பலவீனர்களையும் துன்பத்தில் துடிப்பவர்களையும் தாழ்த்தப்பட்டடோரையும் அவை பேரிகை கொட்டி அழைத்து, சொந்தக் காலில் எழுந்து நின்று சுதந்திரம் பெறுமாறு பறைசாற்றுகின்றன. சுதந்திரம் பௌதீக பெறுமாறு பறைசாற்றுகின்றன. சுதந்திரம் பௌதீக சுதந்திரம், மனசுதந்திரம்,ஆன்ம சுதந்திரம் இவையே உபநிடதங்களின் மூல மந்திரங்களாகும்.

உலகத்திலேயே இந்த ஒரு சாஸ்திரம்தான் மீட்சியைப் பற்றிப் பேசாமல் சுதந்திரம் குறித்துப் பேசுகிறது. இயற்கையின் தளைகளிலிருந்து சுதந்திரம் பெறுங்கள் பலவீனத்திலிருந்து விடுதலை அடையுங்கள்!இந்தச் சுதந்திரம் ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது என்பதையும் அது காண்பிக்கிறது இது உபநிடத போதனைகளின் மற்றொரு சிறப்பாகும். நீ ஒரு துவைதியா? பராயில்லை ஆன்மா இயல்பிலேயே பூரணத் தன்மையுடையது என்பதை ஒப்புக்கொள் குறிப்பிட்ட வினைப் பயன்களின் காரணமாக அந்த ஆன்மா சுருங்கியுள்ளது ராமானுஜரின் சுருங்குதல் மற்றும் விரிதல் கொள்கைகளைத்தான் அப்படியே தற்காலப் பரிணாமாவாதிகள் பரிணாம வாதம் மற்றும் அட்டாவிசம் என்று கூறுகிறார்கள். ஆன்மா பழைய நிலைக்குப்போய் சுருங்கியது போலாகிறது அப்போது அதன் ஆற்றல்கள் அதனுள்ளேயே ஒடுங்கியிருக்கின்றன நற்செயல்கள் மற்றும் நல்லெண்ணங்கள்மூலம் மீண்டும் விரி கிறது தன் இயல்பான பூரணத்துவத்தை வெளிப்படுகிறது.

பரிணாமம் பிரகிருதிக்கு உண்டு என்பதைஅத்வைதி ஒப்புக்கொள்கிறானே தவிர, ஆன்மாவுக்க இருப்பதாக் அவன் ஒப்புக்கொள்வதில்லை. இதுதான் ஒரு வித்தியாசம் .ஒரு திரையிருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் துளை ஒன்று உள்ளது நான் திரையின் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பெரிய கூட்டத்தைப் பார்க்கிறேன் . சில முகங்களை மட்டுமே நான் பார்க்க முடியும்,. துளைபெரிதாகப் பெரிதாகக் கூட்டத்தின் அதிகமான பகுதியைப் பார்க்கலாம். திரையே துளையாகிவிட்டால் கூட்டம் முழுவதையும் பார்ப்பேன். இதில் உங்களுக்கும் எனக்கும் இடையில் எதுவும் இல்லை நானும் மாறவில்லை, நீங்களும் மாறவில்லை மாறுதல் அனைத்தும் திரையில்தான் ஆரம்பம் முதல் கடைசிவரை நீங்கள் நீங்களாகவே இருந்தீர்கள், மாறுதல் எல்லாம் திரையில்தான் பரிணாமத்தைப்பற்றி அத்வைதி சொல்வது இதுதான் பிரகிருதியாகிய திரை நீங்குகிறது: உள்ளிருந்து ஆன்மா வெளிப்படுகிறது ஆன்மா எக்காரணத்தாலும் சுருங்கவோ விரியவோ செய்யவில்லை, அது மாற்றம் அற்றது எல்லையற்றது , ஒன்றேயானது ஒரு திரையால் மாயை என்னும் திரையால் அது மறைக்கப்பட்டது போலுள்ளது . இந்த மாயைத் திரையின் கனம் குறையக்குறைய ஆன்மாவின் இயல்பான மகிமை மேலும் மேலும் வெளிப்படுகிறது இந்தச் சிறப்பானதொரு கோட்பாட்டை இந்தியாவிடமிருந்து அறிந்துகொள்ள உலகம் காத்திருக்கிறது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும், எப்படி வேண்டுமானாலும் பெருமையடித்துக் கொள்ளட்டும்; இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாமல் எந்தச் சமுதாயமும் நிலைத்து நிற்க முடியாது என்பதை அவர்கள் நாளைடைவில் புரிந்து கொள்வார்கள்.

எல்லோரிலும் தெய்வீகம் உள்ளது என்ற இந்தியக் கருத்துபிற நாடுகளிலும் புகுந்து , அவர்கள் அறிந்தோ அறியாமலோ வேலை செய்தே வருகிறது உங்கள் சாஸ்திரங்களில்தான் அதன் விளக்கம் உள்ளது இதைப்பிற நாடுகள் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நடந்துகொள்ளும் முறை முற்றிலுமாக மாறி அமைய வேண்டும் மக்களின் பலவீனத்தையே சுட்டிக் காட்டுகின்ற பழையகருத்துக்கள் ஒழி வேண்டும், இவையெல்லாம் இந்த நூற்றாண்டிற்குள்ளேயே மரண அடி வாங்கிவிடும் . இன்று பலர் எழுந்து நம்மைக் குறை கூறலாம். பாவம் என்கின்ற ஒன்றே இல்லை என்ற ஒரு காட்டுமிராண்டித் தனமான கருத்தை நான் பிரச்சாரம் செய்வதாக உலகின் ஓர் எல்லையிலிருந்து மற்றோர் எல்லைவரை என்னைத் தூற்றுகிறார்கள் அல்லவா ! மிகவும் நல்லது நான் பாவத்தைப் போதித்தவன் அல்ல தர்மத்தைப் போதிப்பவனே தவிர பாவங்களைப் போதிப்பவன் அல்ல இருளையல்ல ஒளியைப் போதிப்பவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்

உபநிடதங்களிலிருந்து பெறுவதற்காக உலகம் காத்திருக்கின்றன இரண்டாவது பெரிய கருத்து, பிரபஞ்சம் முழுவதிலும் ஓர் ஒருமை நிலவுகிறது என்னும் உண்மையாகும். நாடுகளைப் பிரித்திருந்த எல்லைகள் விரைவாக மறைந்து கொண்டிருக்கின்றன. மின்சாரமும் நீராவியும் உலக நாடுகளிடையே தொடர்பை உருவாக்கியுள்ளன. அதன் காரணமாக நம் நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் பேய்களும்பிசாசுளும்தான் வசித்துக் கொண்டிருக்கின்றன என்று இந்துக்களும் கூற முடியாது. அதுபோலவே கிறிஸ்தவநாட்டினரும் இந்தியாவில் காட்டுமிராண்டிகளும் காட்டு மனிதர்களுமே வாழ்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. நாம் வெளிநாடுகளுக்குச் சென்றால் உதவிக்காக நீட்டிய வலுவான கரங்களுடனும் வாழ்த்துக்களைப் நீட்டிய வலுவான கரங்களுடனும் வாழ்த்துக்களைப் பொழிக்கின்ற உதடுகளுடனும் விரைகின்ற நமது சகோதரனைப் போலவே அங்கும் நாம் காண முடியும் நம்நாட்டைப் போலவே சில வேளைகளில் நம் நாட்டினரைவிட அவர்கள் நல்லவர்களாகவே உள்ளனர். அவர்கள் இங்கு வரும்போது அதே சகோதரத்துவம், அதே வரவேற்பு அதே வாழ்த்துக்களையே காண்கிறார்கள்.

எல்லா துன்பங்களுக்கும் காரணம் அறியாமையே என்று நமது உபநிடதங்கள் கூறுகின்றன. சமுதாயம் ஆகட்டும். ஆன்மீகம் ஆகட்டும் அல்லது மற்றெந்தத் துறை ஆகட்டும் இது முற்றிலும் உண்மை. அறியாமையின் காரணமாகத்தான் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்கிறோம். அறியாமையின் காரணமாகவே நாம் ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டதும் அன்பு பிறக்கிறது, பிறந்தேயாக வேண்டும். ஏனெனில் நாம் அனைவரும் உண்மையில் ஒன்றல்லவா? இப்படி ஒருமை உணர்வு தானாகவே உண்டாவதைக் காண்கிறோம். அரசியலிலும் சமுதாயத்திலும் கூட இருபது வருடங்களுக்கு முன் தேசியப் பிரச்சினைகளாக மட்டுமே இருந்தவையானாலும் இன்றுவெறும் தேசியக் கண்ணேட்டத்தில் தீர்வு காண முடியாது இன்று அவை பெரிய அளவில் வளர்ந்துள்ளன, பெரிய பரிமாணங்களைப் பெற்றுவிட்டன பரந்த நோக்குடன் சர்வதேச அளவில் அணுகினால் மட்டுமே அவற்றைத் தீர்க்க முடியும். சர்வதேசச் சங்கங்கள் சர்வதேச அமைப்புக்கள் சர்வதேசச் சட்டங்கள் - இவையே இன்றைய அவசரத் தேவை ஒருமை உணர்வையே இது காட்டுகிறது விஞ்ஞானத்திலும் கூட ஜடவுலகைப்பற்றி இத்தகையதொரு பரந்த முடிவுக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். ஜடப்பொருள் நிலையில் பிரபஞ்சம் முழுவதும் ஒரு மொத்தத் தொகுதியே; ஜடப்பொருளாகிய ஒரே கடல் அதில் நீங்கள் நான் சூரியன் சந்திரன் என்பதெல்லாமே பல்வேறு சிறிய சுழல்களின் பெயர்கள், அவ்வளவுதான் அதற்கு மேலில்லை மனவுலக நிலையில் பார்த்தால் பிரபஞ்சம் தழுவியதோர் எண்ணக்கடலில் நீங்களும் நானும் அதுபோலவே சிறுசிறு சுழல்களாக இருக்கிறோம். ஆன்ம நிலையில் பார்த்தால் ஒன்றேயான மாறுதலற்ற இடையீடற்ற, ஒருமையேயான ஆன்மாவே அது.

நன்னெறியின் தேவை பற்றிய பிரச்சினையும் வருகிறது. அதுவும் நமது சாஸ்திரங்களில் உள்ளன. நற்பண்பின் ஊற்றான நல்லொழுக்கத்தின் விளக்கம் என்ன என்பதைப் பற்றியும் உலகம் அறிந்து கொள்ள விரும்புகிறது. அதுவும் இங்கு கிடைக்கும்.

இந்தியாவில் நமக்குத் தேவையானது எது? இவையெல்லாம் மேலை நாட்டினருக்குத் தேவையானால் நமக்கு அவை இருபதுமடங்கு அதிகம் தேவை. ஏனெனில் ஒப்பற்ற உபநிடதங்களைப் பெற்றிருந்தும், மகரிஷிகளின் பரம்பரையில் வந்தார்கள் என்று மார்தட்டிக் கொண்டாலும் மற்ற இனங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பலவீனர்களாக மிகமிகப் பலவீனர்களாக இருக்கிறோம். இதை நான் சொல்லியே தீர வேண்டும் முதலில் நமது உடல் பலவீனம் நமது துன்பங்களுள் சுமார் மூன்றில் ஒரு பங்கிற்கு உடல் பலவீனமே காரணம். நாம் சோம்பேறிகள் நம்மால் உழைக்க முடிவதில்லை நம்மால் சேர்ந்து வாழ முடிவதில்லை நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பில்லை நம்மிடம் சுயநலம் நிறைந்திருக்கிறது. ஒருவருக்கொருவர் வெறுக்காமல் ஒருவருக்கொருவர் பொறாமைப்படாமல் நாம் மூன்று பேர் சேர்ந்தது வாழ முடிவதில்லை ஒருங்கிணைக்க முடியாதபடி பிரிந்து கிடக்கின்ற கூட்டம். அளவற்ற சுயநலம்; சமயச் சின்னத்தை நெற்றியில் இப்படிப் போடுவதா அப்படிப் போடுவதா என்பதைப்பற்றி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் சண்டை ; ஒருவனின் திருஷ்டி பட்டுவிட்டால் உணவு கெட்டுவிடுமா, இல்லையா என்பது போன்ற அற்ப விஷயங்களைப்பற்றி புத்தகங்களுக்கு மேல் புத்தகங்களாக எழுதிக் குவிப்பது இதுதான் நமது இன்றைய நிலைமை.

கடந்த சில நூற்றாண்டுகளாக இதைத்தான் நாம் செய்து வந்திருக்கிறோம் இத்தகைய அழகான அற்புதமான பிரச்சினைகளிலும் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்ருக்கின்ற ஓர் இனத்திடம் உயர்ந்த எதையும் எதிர்பார்க்க முடியாதுதான் நம்மைஎண்ணி நமக்கே அவமானம் வரவில்லையா? ஆம் சில வேளைகளில் வரத்தான் செய்கிறது.இவையெல்லாம் அற்பமானவை என்று நினைத்தாலும் நம்மால் அவற்றை விட முடிவதில்லை நாம் என்னவெல்லாமோ நினைக்கிறோம். ஆனால் அவற்றைச் செய்வதில்லை கிளிப்பிள்ளைகள் போல. நினைப்பதும் நினைப்பதைச் செய்யாதிருப்பதும் நமக்கு வழக்கமாகப் போய்விட்டது. இதற்குக் காரணம் என்ன? நமது உடல் பலவீனம். வலுவற்ற இத்தகைய மூளையால் எதையும் செய்ய முடியாது. அதைப் பலப்படுத்த வேண்டும்.

முதலில் நமது இளைஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். மத உணர்ச்சி அதற்கு பின்னரே வரும். என் வாலிப நண்பர்களே வலிமை பெறுங்கள். இதுவே நான் உங்களுக்கு கூறும் அறிவுரை.நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்தாடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும். இவை தைரியமான வார்த்தைகள் இருப்பினும் இவற்றை நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன். பிரச்சினை எங்கு என்பது எனக்குத் தெரியும் எனக்குக் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. உங்கள் கை கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் வலிமை சேர்ந்தால் கீதையை இன்னும் நன்றாக உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் ரத்தத்தில் வேகம் இருந்தால் ஸ்ரீகிருஷ்ணரின் மகத்தான ஆற்றலையும் மேதாவிலாசத்தையும் நீங்கள் இன்னும் சிறப்பாக அறிய முடியும். உங்கள் சொந்தக் கால்களில் நிமிர்ந்து நின்று உங்களை மனிதன் என்று உணரும் போதுதான் நீங்கள் . உபநிடதங்களையும் ஆன்மாவின் மகத்துவத்தையும் நன்றாக அறிந்துகொள்ள முடியும் இப்படியே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நான் அத்வைதத்தை உபதேசிப்பதாகப் பலர் அதிருப்தி அடைகிறார்கள். அத்வைதத்தையோ துவைதத்தையோ உலகின் வேறு எந்தக் தத்துவத்தையுமோ நான் பிரச்சாரம் செய்ய விரும்பவில்லை. நமக்கு இப்போது வேண்டிய தத்துவமெல்லாம் ஆன்மா பற்றிய இந்த அற்புதக் கருத்துதான் அதன் அழிவற்ற மகிமை அதன் இணையற்ற ஆற்றல் அதன் எல்லையற்ற தூய்மை அதன் குறைவற்ற பூரணத்துவம் எனக்கு ஒரு குழந்தை இருந்தால் பிறவியிலிருந்தே அதை நீ அந்தத் தூய ஆன்மா என்று சொல்லியே வளர்ப்பேன் நமது புராணம் ஒன்றிலுள்ள ராணி மதாலாசாவின் அற்புதமான கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள் தனக்கு ஒரு குழந்தை பிறந்ததும் அதைக் தொட்டிலில் இட்டுத் தாலாட்டி நீ அந்தத் தூய ஆன்மா நீ களங்க மற்ற, பாவமில்லாத சர்வசக்தி வாய்ந்த மகத்தான ஆன்மா நீ என்று அவள் பாடினாளாம் அதில் பெரிய கருத்து அடங்கியுள்ளது உங்களை மேன்மையானவர்கள் என்று நினையுங்கள் அப்படியே ஆவீர்கள்.

உலகம் முழுவதிலுமிருந்தும் எனக்கு அனுபவமாக என்ன கிடைத்தது என்பது தான் கேள்வி ஆங்கிலேயர்கள் பாவிகளைப்பற்றிப் பேசலாம் தாங்கள் பாவிகள் என்று அவர்கள் உண்மையாக நம்புவார்களானால் அவர்கள் மத்திய ஆப்பிரிக்க நீக்ரோக்களைவிட மேலானவர்களாக இருக்க முடியாது. ஆனால் அவர்கள் அவ்வாறு நம்பவில்லை ஆண்டவன் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்! ஒவ்வோர் ஆங்கிலேயனும் தான் உலகையே ஆளப் பிறந்தவன் என்று நம்புகிறான்; தான் மேலானவன், தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நம்புகிறான். தான் விரும்பினால் சூரிய சந்திர மண்டலங்களுக்குக் கூடப் போக முடியும் என்று நம்புகிறான் அவன். இந்த நம்பிக்கைதான் அவனை மகத்தானவன் ஆக்குகிறது . அவன் இழிவான பாவி, மீளா நரகத்தில் பெருநெருப்பில் வாடப் போகிறான் என்று பாதிரிகள் கூறியதை அவன் நம்பியிருந்தால் இன்று இருக்கின்ற ஆங்கிலேயனாக அவன் இருந்திருக்க மாட்டான்.

இந்தப் புரோக்கிதர்களையும் மூட நம்பிக்கைகளையும் மீறி, மானுட வாழ்வில் தெய்வீகம் இருக்கவே செய்கிறது, அது தன்னை நிலைநாட்டத்தான் செய்கிறது - ஒவ்வொரு நாட்டிலும் நான் இதையே காண்கிறேன். நாம் நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஓர் ஆங்கிலேயனுக்கோ ஆங்கிலப் பெண்ணுக்கோ இருப்பதில் ஆயிரத்திலொரு பங்கு நம்பிக்கைகூட நம்மிடம் இல்லை என்று நான் சொல்வதை உங்களால் நம்ப முடியுமா? வருத்தம் தரக்கூடிய விஷயம்தான். ஆனால் சொல்வதை என்னால் தவிர்க்க முடியாது. ஆங்கிலேயனோ அல்லது ஆங்கிலப் பெண்ணோ நமது லட்சியங்களை ஏற்றுக்கொண்டால் அதில் மூழ்கி பைத்தியம் போலவே ஆகிவிடுகின்றனர். ஆளும் வர்க்கத்தினராக இருந்தும் சொந்த நாட்டினரின் கோபத்தையும் கேலியையும் பொருட்படுத்தாமல் இந்தியாவிற்கு வந்து நம் மதத்தை நமக்கே போதிக்க அவர்கள் எத்தனை பேர் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களில் எத்தனை பேர் அவ்விதம் செய்ய முடியும் ? உங்களால் ஏன் அவ்வாறு செய்ய முடியாது? அது உங்களுக்குத் தெரியாததா? அவர்களைவிட உங்களுக்குத் அதிகம் தெரியும் ஆனால் உங்கள் நன்மைக்குத் தேவையானதைவிட அதிகம் தெரிந்துவிட்டது ! அதுதான் உங்கள் கஷ்டம் ! உங்கள் இயலாமைக்கு ஒரே காரணம் உங்கள் ரத்தம் வெறும் தண்ணீர், உங்கள் மூளை வலுவிழந்துவிட்டது உடல் பலமற்றுள்ளது! நீங்கள் உடம்பை மாற்றிக்கொள்ள வேண்டும். உடலின் பலவீனம்தான் இதற்குக் காரணம் வேறொன்றும் அல்ல. சீர்த்திருத்தங்கள் லட்சியங்கள் போன்றவை பற்றியெல்லாம் கடந்த நூறு வருடங்களாக வெறும் பேச்சு பேசி வந்திருக்கிறீர்கள் ஆனால் செயல்முறைக்கான வேளை வரும்போது உங்களை எங்கும் காண முடியவில்லை இதைக் கண்டு உலகமே உங்களை எள்ளி நகையாடுகிறது. சீர்திருத்தம் என்ற பெயரே கேலிக்கூத்தாகிவிட்டது ! இதற்கெல்லாம் காரணம் என்ன? காரணம் உங்களுக்குத் தெரியாததா என்ன? நன்றாக தெரியும். நீங்கள் பலவீனமாயிருப்பதே இவை அனைத்திற்கும் காரணம். பல வீனம் பலவீனம் உங்கள் உடல் பலவீனமாக இருக்கிறது. உங்கள் மனம் பலவீனாயிருக்கிறது. உங்களிடமே உங்களுக்கு நம்பிக்கையில்லை.

என் சகோதரர்களே! நூற்றாண்டுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜாதிக் கொடுமையும்,மன்னர் கொடுங்கோன்மையும் அன்னியர் அரசாட்சியும் உங்கள் சொந்த மக்களே உங்களுக்கு இழைத்த கொடுமைகளும் சேர்ந்து உங்கள் பலத்தையெல்லாம் பிழிந்தெடுத்து விட்டன. உங்கள் முதுகெலும்பு உடைந்து வெறும் புழுக்கள் போலாகிவிட்டீர்கள். யார் உங்களுக்கு வலிமை தருவார்கள்? வலிமை வலிமை தான் நமக்கு இப்போது தேவை. வலிமை பெறுவதற்கான முதல் படி உபநிடதங்களை அடைந்து நான் ஆன்மா என்று நம்புவதுதான் என்னை வாள் வெட்டாது ஆயுதங்கள் துளைக்காது நெருப்பு எரிக்காது காற்று உலர்ந்தது நான் எல்லாம் வல்லவன் நான் எல்லாம் அறிந்தவன் நம்மைக் காப்பாற்றக்கூடிய மங்கலமயமான இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். நம்மைப் பலவீனர்களென்று சொல்லாதீர்கள் நாம் எதையும் செய்ய முடியாது நம்மால் எதைத்தான் சாதிக்க முடியாது! எல்லாமே நம்மால் முடியும். அந்த மகத்தான ஆன்மா நம் அனைவருக்குமே உள்ளது என்பதை நம்புவோம். நசிகேசன் கொண்டதைப் போன்ற நம்பிக்கை கொள்ளுங்கள் அவனது தந்தை செய்த யாகத்தின் போது அவனுக்கு நம்பிக்கை பிறந்தது அத்தகைய நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவருக்கும் வர வேண்டுமென நான் விரும்புகிறேன் . அப்போது நீங்கள் ஒவ்வொருவரும் மகத்தான சக்தி பெற்று உலகத்தையே அசைக்கக்கூடிய பரந்த அறிவைப் பெறுவீர்கள்: எல்லா விதத்திலும் எல்லையற்ற கடவுளாகவே ஆவீர்கள். நீங்கள் அப்படி ஆக வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். இத்தகைய வலிமை நீங்கள் உபநிடதங்களிலிருந்து பெறுவது இத்தகைய நம்பிக்கையே உபநிடதங்கள் நமக்கு அளிப்பவை.

ஆனால் உபநிடதங்கள் துறவிகளுக்கு மட்டுமே அல்லவா உரியவை ! அவை ரகசியமானவை ஆயிற்றோ! அவை துறவிகளின் கைகளில் அல்லவா உள்ளன! அவர்களும் காடுகளில் வசிக்கிறார்கள் !சங்கரர் ஏதோ சிறிது கருனை உடையவராக இருந்தார், இல்லறத்தார்களும் உபநிடதங்களைப் படிக்கலாம் அவை அவர்களுக்கு நல்லதே செய்யும் தீங்கு செய்யாது என்றார் . ஆனாலும் அவை துறவின் வன வாழ்க்கையைப்பற்றி மட்டுமே சொல்கின்றன என்று தான் மக்கள் எண்ணினார்கள் ஆனால் நான் முன்னர் உங்களுக்குக் கூறியதுபோல் தேவங்களுக்கு அதிகாரபூர்வமான ஒரே விளக்கத்தை வேதத்தை ஊக்குவித்தவாரன ஸ்ரீகிருஷ்ண பகவானே எல்லா காலத்திற்குமாக முடிந்த முடிவாகக் கீதையில் அருளியிருக்கிறார் எந்தத் தொழில் செய்வவராயினும் எல்லோருக்கும் உபநிடதங்கள் பொதுவானவை வேதாந்தத்தின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்தாக வேண்டும் காட்டில் மட்டும் இருந்தால் போதாது குகைகளில் மட்டும் இருந்தால் அவை வெளிவந்து வழக்கறிஞர் சபைகளிலும் வழிபாட்டு மேடைகளிலும் ஏழையின் குடிசையிலும் மீன் பிடிக்கும் மீனவரிடமும் படிக்கின்ற மாணவரிடமும் செயல்பட்டாக வேண்டும் அவர்களின் தொழில் எதுவாகவும் இருக்கட்டும் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வசிக் கட்டும்; ஆண் பெண் குழந்தை என்று அவர்கள் அனைவரையும் அவை கூவி அழைக்கின்றன. பயம் எதற்கு?

மீனவர்களும் பிறரும் எப்படி இந்த உபநிடதலட்சியங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க முடியும்? அதற்கு வழி காட்டப்பட்டுள்ளது அது எல்லையற்றது, மதம் எல்லையற்றது, அதைக் கடந்து யாரும் செல்ல முடியாது நீங்கள் சிரத்தையுடன் அதற்காக எதைச் செய்தாலும் அது உங்களுக்கு நன்மையே தரும். சிறு அளவில் ஆனாலும் சிரத்தையுடன் செய்தால் அது அற்புதமான பலன்களை அளிக்கும் ஆதலால் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு சிறிதேனுமும் முயற்சி செய்யட்டும் மீனவன் தன்னை ஆன்மாவென நினைத்தால் சிறந்த மீனவன் தன்னை ஆன்மாவென நினைத்தால் சிறந்த மீனவன் ஆவான். மாணவன் தன்னை ஆன்மாவென நினைத்தால் சிறந்த மாணவன் ஆவான் . வக்கீல் தன்னை ஆன்மாவென நினைத்தால் சிறந்த வக்கீல் தன்னை ஆன்மாவென நினைத்தால் சிறந்த வக்கீலாவான். இவ்விதமே எல்லோரும். இதன் விளைவாக ஜாதிகள் என்பவை என்றென்றைக்கும் இருக்கும் சமுதாயத்தின் இயல்பே குழுக்களாகப் பிரிவதுதான். எனவே ஜாதிகள் இருக்கும். ஆனால் சில பிரிவினருக்கான தனிச் சலுகைகள் போய்விடும்!

ஜாதி என்பது இயல்பான ஒன்று. சமுதாய வாழ்வில் நான் ஒரு தொழில் செய்யலாம்: நீங்கள் வேறொன்று செய்யலாம். நீங்கள் அரசாளலாம் நான் செருப்பு தைக்கலாம். ஆனால் அதன் காரணமாக நீங்கள் உயர்ந்தவர் என்று சொல்ல முடியாது. ஏனெனில் உங்களால் செருப்புத் தைக்க முடியுமா?இல்லை என்னால்தான் நாட்டை ஆள முடியும்? நான் செருப்பு தைப்பதில் வல்லவனாய் இருக்கலாம் நீங்கள் வேதம் படிப்பதில் நிபுணனாக இருக்கலாம் , ஆனால் அதன் காரணமாக நீங்கள் என் மீது ஏன் ஏறி மிதிக்க வேண்டும் ? ஒருவன் கொலை செய்தால் கூட அவனைப் புகழ வேண்டுமாம், மற்றொருவன் ஓர் ஆப்பிளைத் திருடினாலும் அவனை தூக்கிலிட வேண்டுமாம். இவை ஒழிய வேண்டும் ஜாதிகள் நல்லது. வாழ்க்கையை இயல்பாகக் கையாள்வதற்கான வழி அது ஒன்றுதான் மனிதர்கள் குழுக்களாகப் பிரிந்து தான் வாழ முடியும் அதை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் எங்கு சென்றாலும் ஜாதிகள் இருக்கவே செய்யும் ஆனால் அதன் காரணமாக யாருக்கும் தனிச் சலுகை இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தச் தனிச் சலுகைகளின் தலையிலடித்து அவற்றை ஒழிக்க வேண்டும். ஒரு மீனவனுக்கு வேதாந்தம் கற்பித்தோமானால் அவன் உன்னைப் போலவே நானும் நல்லவன் நான் மீன் பிடிப்பவன் நீ தத்துவவாதி ஆனால் உன்னில் போலவே என்னிலும் கடவுள் இருக்கிறார் என்று கூறுவான் யாருக்கும் தனிச் சலுகையில்லை எல்லோருக்கும் சம வாழ்ப்புக்கள்; இதுவே நமக்கு வேண்டும் தெய்வீகம் ஒவ்வொருவரின் உள்ளே இருக்கிறது என்பதை அவர்களுக்குக் கற்பியுங்கள். பின்னர் அவர்களே தங்கள் முக்திக்கு வழி தேடிக்கொள்வார்கள்.

சுதந்திரமே வளர்ச்சிக்கான முதல் நிபந்தனை இந்தப் பெண் அல்லது அந்தக் குழந்தையின் முன்னேற்றத்திற்கு நான் வழி வகுப்பேன் என்று யாராவது சொல்லத் துணிவானானால் அது தவறு முற்றிலும் தவறு விதவைகளின் பிரச்சினைபற்றியும், பெண்கள் நிலையைப் பற்றியும் எனது கருத்து என்ன என்று என்னை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள், அவற்றிற்கான பதிலை இப்போது ஒரேயடியாகக் கூறிவிடுகிறேன் நான் என்ன விதவையா பெண்ணா என்னிடம் இந்த அசட்டுக் கேள்விகளைத் திரும்பத் திரும்பத் கேட்கிறீர்களே! பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் யார் ? விதவைகளையும் பெண்களையும் ஆள்வதற்கு நீங்கள் என்ன எல்லாம்வல்ல கடவுளா? விலகி நில்லுங்கள் ! அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள், கொடுங்கோலர்களே ஒருவருக்கு வேண்டிய அனைத்தையும் நீங்கள் செய்ய முடியுமென்று நினைக்கிறீர்களே! விலகி நில்லுங்கள் இறைவன் எல்லோரையும் பார்த்துக்கொள்வார். எல்லாம் தெரியும் என்று நினைப்பதற்கு நீங்கள் யார் பொய்யர்களே கடவுள் மீதும் அதிகாரம் செலுத்த முடியுமென்று நினைக்க எப்படித் துணிந்தீர்கள்? ஒவ்வொரு ஜீவனும் அந்தப் பரமாத்மாவின் அம்சம் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்கள் வேலையைப் பாருங்கள். உங்கள் கர்மங்களே கொட்டிக் கிடக்கின்றன, அதைத் தீர்ப்பதற்கான வழியைப் பாருங்கள் உங்கள் நாடு உங்களை உயர்ந்த பீடத்தில் வைத்துப் பெருமைப்படுத்தலாம் உங்கள் சமுதாயம் உங்களை வானாளாவப் புகழலாம்; அறிவற்ற மூடர்கள் உங்களைப் பாராட்டலாம். ஆனால் ஆண்டவன்ங ஒரு போதும் உறங்குவதில்லை, இம்மையிலோ மறுமையிலோ வினைப்பயன் தொடர்ப்தே தீரும்.

ஆண், பெண் குழந்தை ஒவ்வொருவரையும் கடவுளாகப் பாருங்கள். நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது, சேவைதான் செய்ய முடியும் பகவானுடைய குழந்தைகளுக்குச் சேவை செய்யுங்கள் உங்களுக்கு அந்தப் பேறிருந்தால் அதன் மூலம் ஆண்டவனுக்கும் சேவை செய்தவர்கள் ஆவீர்கள். தன் குழந்தைகளுள் ஒருவருக்கேனும் உதவும் பேற்றை ஆண்டவன் உங்களுக்கு அளிப்பானானால் நீங்கள் அருள் பெற்றவர்கள்! உங்களைப்பற்றிப் பெரிதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்குக் கிடைக்காமல் இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது பெரும் பேறு இந்தச் சேவையே இறைவனின் வழிபாடு எனச் செய்யுங்கள். ஏழைகளிடம் கடவுளைக் காணுங்கள் உங்கள் முக்திக்காகவே உள்ளனர். அதற்காகவே பகவானும் நோயாளியாக பைத்தியமாக தொழுநோயாளியாக பாவியாக நம் முன் வருகிறார். எனது வார்த்தைகள் தைரியமானவை மீண்டும் சொல்கிறேன் - இந்த உருவங்களில் கடவுளை வழிபட நமக்கு வாய்ப்புக் கிடைத்தது பெறற்கரிய பேறாகும். பிறர்மீது அதிகாரம் செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் செய்ய முடியும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள் ஒரு செடிக்குச் செய்யக்கூடிய அளவுதான் நீங்கள் ஒருவருக்கு உபகாரம் செய்ய முடியும். விதை முளைத்து வளர்வதற்கான மண் தண்ணீர் காற்று முதலியவற்றை நீங்கள் கொடுக்கலாம். ஆனால் இவற்றை அது தன் இயல்பின் படிதான் ஏற்றுக்கொள்ளும், தன் இயல்பின் படியே ஜீரணித்து வளரவும் செய்யும்.

ஒளி! ஒளியை கொண்டு உலகின் மீது எல்லா ஒளியையும் பாய்ச்சுங்கள் ஒவ்வொருவரையும் இந்த ஒளி அடையட்டும் ஒவ்வொருவரும் கடவுளை அடையும் வரை இந்தப் பணி முடிவடையாது . ஏழைகளுக்கு இந்த ஒளியை அளியுங்கள். அதைவிட அதிகமாக பணக்காரர்களுக்குக் கொடுங்கள் ஏனெனில் அவர்களுக்கு இது ஏழைகளை விட அதிகமாகத் தேவை கல்லாதவர்களுக்கு இந்த ஒளியை அளியுங்கள். அவர்களைவிட அதிகமாக கற்றவர் களுக்குக் கொடுங்கள் ஏனெனில் அவர்கள் தற்காலப் படிப்பினால் ஆணவம் தலைக்கேறிக் கிடக்கிறார்கள். இவ்விதம் எல்லோருக்கும் ஒளி கொடுங்கள் மீதியை இறைவனிடம் விட்டு விடுங்கள். ஏனெனில் அதே இறைவன் வேலை செய்ய மட்டுமே உனக்கு உரிமை உள்ளது பயன்களில் அல்ல என்றல்லவா கூறியுள்ளார் உனது வேலை உனக்குப் பலனளிக்க வேண்டாம் அதற்காக வேலை செய்யாமலும் இருக்காதே.

யுகயுகங்களுக்கு முன்னரே இத்தகைய மகத்தான கருத்துக்களை நம் முன்னோர்களுக்கு அளித்த அந்த இறைவன் அவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துவற்கான ஆற்றலை நமக்கு அளிப்பானாக!

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,