கொம்பில் அமர்ந்த கொசு!

ஒரு கொசு பறந்து வந்தது. ஒரு காளை மாட்டின் கொம்பு மீது அதுபோய் உட்கார்ந்தது.நீண்ட நேரம் அப்படியே இருந்தது. அதன் மனத்திற்குள் ஓர் உறுத்தல் நாம் வெகு நேராமாக இங்கேயே உட்கார்ந்திருக்கிறோமே... மாட்டுக்கு வலிக்காதா ? அது தாங்குமா? என்ன காளையாரே இங்கே நான் ரொம்ப நேரமாக உட்கார்ந்திருக்கிறேன் உங்களுக்குச் சிரமமாயிருக்கும் அதனாலே இதோ நான் புறப்பட்டு விட்டேன்! இதைக் கேட்டதும் காளைக்குச் சிரிப்பு வந்தது. கொசுவே நீ போக வேண்டியதில்லை... வேண்டுமானால் போய் உன் குடும்பத்தையே கூட அழைத்துக் கொண்டு வா... எல்லோருமாக சேர்ந்து என் கொம்பிலே உட்கார்ந்து கொள்ளுங்கள். அதைப்பற்றி எனக்கென்ன கவலை ? என்றது காளை சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் அந்த காளையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அது எதையும்தேடிச்செல்லவில்லை அது எதையும் விலக்கவுமில்லை வருவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. எதனாலும் பாதிக்கப்படவில்லை பொறுத்துக் கொள்வது மட்டுமல்ல பற்றற்று இருப்பதும் முக்கியம் நமக்கு தேவை அதுதான்.

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,