இந்து சமயம் பகுதி-3


இந்து சமயம் பகுதி-3
இதை நினைக்கும்போது நெஞ்சு தளர்கிறது ஆனால் இதுதான் இயற்கையின் நியதி நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா? என்ற குரல் எழுந்து மேலே சென்றது . அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழுச் செய்ய அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்திகளை முழங்கினார் ஒ அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே கேளுங்கள் . உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்கள் அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்த ஆதி முழுமுதலை நான் கண்டுவிட்டேன் அவரை அறிந்தால் தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.

அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே! ஆ, ஆ! எவ்வளவு இனிமையான எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சதோதரர்களே அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாதபேரின்பத்தின் வாரிசுகளே ஆம் உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள் புனிதமானவர்கள் பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே வீறுகொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள்! நீங்கள் ஜடப்பொருள் அல்ல நீங்கள் உடல் அல்ல; ஜடப்பொருள் உங்கள் பணியாள் நீங்கள் ஜடப்பொருளின் பணியாளர் அல்ல.

இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை; காரண காரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை ; ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில் ஜடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறுபகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான்; அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது உலகில் மரணம் நடைபோடுகிறது என்று கூறுகின்றன.

அவனது இயல்பு தான் என்ன? 

அவன் எங்கும் நிறைந்தவன் புனிதமானவன் உருவற்றவன் எல்லாம் வல்லவன் பெருங்கருணையாளன்.' அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நன்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய்! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எங்களுக்கு அருள் செய்வாய் வேத முனிவர்கள் இவ்வாறு பாடினார்.

அவனை எப்படி வழிபடுவது ? அன்பினால் இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும் விட அதிக அன்பிற்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும் வேதங்கள் முழுங்குவதும் இந்த அன்பு நெறியையே கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார் எப்படி மக்களுக்குப் போதித்தார் என்று பார்ப்போம்.

மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப்போல் வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அதுபோல் மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்யவேண்டும்.

இவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லதுதான் ஆனால் அன்பிற்காகவே அவனிடம் அன்பு செலுத்துவது சிறந்தது. எம்பெருமானே, எனக்குச் செல்வமோ பிள்ளைகளோ கல்வியோ வேண்டாம் உனது திருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும்மீண்டும் பிறக்கத்தயாராக இருக்கிறேன் . ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்பிற்காகவே அன்பு செய்யவும் அருள் செய் என்கிறது ஒரு பிரார்த்தனை.

ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர் பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது . ஒருநாள் அரசி யுதிர்ஷ்டிரரிடம் அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும் என்று கேட்டாள் அதற்கு யுதிஷ்டிரர் தேவி இதோ இந்த இமய மலையைப்பார் . எவ்வளவு எழிலோடும் மாட்சிமை யோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன் இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளதைப் பறிகொடுப்பது என் இயல்பு அதனால் நான் நேசிக்கிறேன் அவரே எல்லா அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம் அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. . ஆதலால் நான் அவரைநேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும் அன்பிற்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால் முடியாது என்றார்.

ஆன்மா தெய்வீகமானது ஆனால் ஜடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறை நிலையை அடைகிறது அந்த நிலையே முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.

கடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிலும். அந்தக் கருணை தூயவர்களுக்குத்தான் கிடைக்கும் எனவே அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படி செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம் தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர் அப்போதுதான் இதயக் கோணல்கள் நேராகின்றன. சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.

இதுதான் இந்து சமயத்தின் மையமும் அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.

இந்து வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை புலன்வசப்பட்ட சாதரானவாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால் அவன் அவற்றை நேருக்குநேர் காண விரும்புகிறான் ஜடப் பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான் அவன் அவரைக் காண வேண்டும் அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும் ஆன்மா இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடிய சிறந்த சான்று நான் ஆன்மாவைக் கண்டுவிட்டேன் நான் கடவுளைக் கண்டுவிட்டேன் என்று அவர் கூறுவதுதான் நிறைநிலைக்கு அதுதான் ஒரே நியதி இந்து சமயம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்ச்சிகளிலும் அடங்கிவிடாது வெறும் நம்பிக்கை அல்ல உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து சமயம்.

இடைவிடாத முயற்சியின் மூலம் நிறைநிலை பெறுவதும் தெய்வத்தன்மை அடைவதும் தெய்வத்தை அனுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கம் தெய்வத்தை அணுகி அவனைக் கண்டு வானில் உறையும் தந்தையைப் போல் நிறைநிலை அடைவதுதான் இந்துக்களின் சமயம்.நிறைநிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான் பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அவனுடன் பேரானந்தத் தில் திளைக்கிறான்.

இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப்போகின்றனர். இந்தியாவிலுள்ள எல்லா சமயப் பிரிவினர்களுக்கும் இதுதான் பொதுவாக உள்ள சமயம். நிறை நிலை என்பது எல்லையற்றறு. எல்லையற்றது இரண்டாகவோ மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது. எனவே ஆன்மா நிறைநிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக தானேயாக, தனது இயல்பாக இருக்கின்ற ஒருவர் மட்டுமாக தனியறிவு வடிவமாக பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித்தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ கல்லைப் போன்றோ ஆகிவிடுவதுதான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான் .'

நான் சொல்கிறேன் அது அம்மாதிரி அல்ல இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பதுஇன்ப இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருக பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக பிரபஞ்ச உணர்வாக மாறும் போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது.

எல்லையற்ற பிரபஞ்சம் தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்டுமானால் துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும் போதுதான் மரணம் அகல முடியும். அறிவுடன் ஒன்றும்போதுதான் துன்பம் அகல முடியும். அறிவுடன் ஒன்றும் போதுதான் பிழைகள் அகல முடியும். இதுதான் விஞ்ஞானத்திற்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒரு மாயை இடைவெளியற்றுப் பரந்து நிற்கின்ற ஜடப்பொருளாகிய கடலில் தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள்தான் என் உடல் என்று விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது; எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை) என்ற முடிவிற்குத்தான் வரவேண்டியிருக்கிறது.

ஒருமைநிலையைக் கண்டுபிடிப்பதுதான் விஞ்ஞானம். முழுமையான ஒருமைநிலை கிட்டியதும் விஞ்ஞானம் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டிவிட்டது . அதுபோலவே எந்த மூலப்பொருளிலிருந்து எல்லா பொருட்களும் படைக்கப்படுகின்றனவோ அதைக் கண்டுபிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூல சக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப்படுகின்றனவோ, அதைக் கண்டறிந்ததும் இயற்பியல் நின்று விடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில் மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டபிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மா வைக் கண்டுபிடித்ததும் சமய விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.

விஞ்ஞானம் அனைத்தும் கடைசியில் இந்த முடிவிற்குத்தான் வந்தாக வேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பதுதான் இன்றைய விஞ்ஞானத்தின் கூற்று. தான் பல்லாண்டு களாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில் தற்கால விஞ்ஞான முடிவுகளின் ஆதார விளக்கங்களுடன் புகட்டப்படப்போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியே அடைகிறான்.

தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரன மக்களின் சமயத்திற்கு வருவோம். பலதெய்வ வழிபாடு இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை தெய்வத்தின் எல்லா குணங்களும் - எங்கும் நிறைந்த தன்மை உட்படத்தான் - இருப்பதாகக் கூறி வழிபடுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பலதெய்வ வழிபாடாகாது; பல தெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி அவரை வழிபடுகின்ற கோட்பாடு என்றும் இதனை விளக்க முடியாது. ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதே நறுமணம்தான் கமழும்,' பெயர்கள் விளக்கங்களாக மாட்டாது.

நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பலசுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில் நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்து விடும்? என்று கேட்டார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல் உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்? என்று கேட்டார்,' இறந்தாலும் நீ தண்டிக்கப்படுவாய் என்று பதிலளித்தார் பாதிரி. ' அப்படியே எங்கள் விக்கிரமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திரும்பிச் சொன்னார் அந்த இந்து!

பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது . உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்கு பவர்களைநான் காணும்போது,' பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா? என்று என்னை நானே கேட்டுக் கொள்றேன்.

மூடநம்பிக்கை மனிதனின் பெரும் பகையாகும். ஆனால் சமயவெறி அதைவிட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான் ? சிலுவை ஏன் புனிதமானது ? பிராத்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும் ? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்த்தனை செய்யும் போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?

என் சகோதரர்களளே சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாதது போல் உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி. நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. தொடர்பு விதியின்படி புற உருவம் அகக் கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவு படுத்துகிறது. அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச் சின்னத்தைப் பயன்படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான் அந்த உருவம்கடவுள் அல்ல அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப்போல் அவனுக்கும் தெரியும் . ' எங்கும் நிறைந்தது என்று சொல்லும்போது பெரிதாக என்னதான் புரிந்துகொள்ள முடியும்? அது ஒரு சொல் சின்னம் மட்டுமே . இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமாஎன்ன? எங்கும் நிறைந்தவர்என்று நாம் திருறும்பித்திரும்பச் சொல்லும் போது, மிஞ்சிப் போனால் விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம் அவ்வளவுதான்.

எல்லையற்றது என்ற கருத்தை நீலவானத்தின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்புபடுத்தியே பார்க்க வேண்டியுள்ளது,மன அமைப்பு நியாதிகள் அவ்வாறே தான் செயல்படுகின்ற. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச் பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்டளுடன் அதனை இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது, இந்துக்களும் தூய்மை, உண்மை எங்கும் நிறைந்த நிலை ஆகிய கருத்துக்களை பல்வேறு உருவல்களுடனும் தோற்றங்களுடனும் தொடர்புபடுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம் சிலர் சர்ச்சியின் உருவ வழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக்கொண்டு அதற்குமேல் வளராமல் நின்று விடுகிறார்கள் அவர்களை. அவர்களைப் பொறுத்தவரை சமயம் என்றால் சில கோட்பாடுளை ஒப்பக்கொள்வது பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோயில்கள், சர்ச்சுகள் நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள் ஆதாரங்கள் ஆனால் அவன் இன்னும் மேலேமேலே முன்னேற வேண்டும்.

அவன் எங்குமே நின்றுவிடக் கூடாது.' புற வழி பாடும் ஜடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல் நிலைக்குவர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர் விக்கிரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள்: ' அவனை சூரியனும் விவரிக்க முடியாது சந்திரனும் விளக்க முடியாது.விண்மீன்களாலும் மின்னலாலும் விளக்க முடியாது. தீயும் அவனை விவரிக்காது. அவை அனைத்தும் அவனால் தான் ஒளிர்கின்ற

இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவுபடுத்திப் பேசுவதில்லை எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான் குழந்தை மனிதனின் தந்தை குழந்தை பருவம் பாவமானது அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?

ஒரு விக்கிரகத்தின் மூலமாக தனது தெய்வீக இயல்பை ஒருவன் உணர முடியும் என்றால் , அதைப் பாவம் என்று கூறுவது சரியா? அந்த நிலையைக் கடந்த பிறகு அவனே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி மனிதன் தவறிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையிலிருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலைக்கு உண்மைக்கு பயணம் செய்கிறான். அவனைப் பொறுத்தவரை மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம்பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள் . ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது ஒவ்வென்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது உயர்ந்து செல்லச் செல்ல மேன் மேலும் வலுவைப் பெற்று கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.

வேறுபாட்டில் ஒருமைதான் இயற்கையின் நியதி அதை இந்து உணர்ந்துள்ளான். பிற சமயங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகின்றன;. ஒரே ஒரு சட்டையைவைத்துக்கொண்டு சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான் ஹென் எல்லோருக்கும் அந்த ஒரு சட்டை பொருத்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ ஹென்றிக்கோ சட்டை பொருந்தாவிட்டால் அவர்கள் சட்டையில்லாமல் தான் இருக்கவேண்டும்.

சார்புப் பொருட்கள்மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ நினைக்கவோ பேசவோ முடியும் திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் ஆணிகளே என்பதை இந்துக்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல ஆனால் தேவைப்படாதவர்கள் அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அல்ல.

ஒன்று நான் சொல்ல வேண்டும் இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்துகொள்வதற்கு பக்குவப்படாதவர்களின் முயற்சிதான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் துறவுடன் உண்டு சிலவேலைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களைவருத்திக் கொள்வார்களே தவிர அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள். இந்து சமய வெறியன் தன்னைத் தீயில் கொளுத்திக் கொள்வானே தவிரப் பிறரையல்ல, சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படி கிறிஸ்தவ சமயம் பொறுப்பில்லையோ, அதேபோல் இதற்கு இந்து சமயம் பொறுப்பிப்பல்ல

இந்துவிற்கு உலகின் எல்லா சமயம் சமயங்களும் பலவித நிலைகளிலும் சந்தர்ப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கி செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா சமயங்களின் நோக்கம். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள்தான் அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் இருக்கக் காரணம் என்ன? மாறுபாடுகள் எல்லாம் வெளித்தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி மாற்றி அமைத்துக் கொள்கின்ற ஒரே உண்மையில் இருந்துதான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.

ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம் . ஆனால் எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மை தான் ஆட்சிசெய்கிறது. முத்து மாலையிலுள்ள முத்துக் களைக் சேர்க்கின்றன நூல்போல் நான் எல்லா சமயங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப் படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ. அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி என்று பகவான் தன் கிருஷ்ணாவாதாரத்தின் போது இந்துக்களுக்குச் சொன்னார் . அதன் பலன் என்ன இந்துக்கள் மட்டுமே காப்பாற்றபடுவார்கள். , மற்றவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று சம்ஸ்கிருதத் தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். ' நமதுஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம். என்கிறார் வியாசர்.

இன்னொன்று ; அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்டு இந்து எப்படி சூன்யவாதம் பேசும் பௌத்தர்களையும் நாத்திகவாதம் பேசும் சமணர்கிளையும் நம்புவான் ? பௌத்தர்களோ சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும என்னும் எல்லா சமயங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அது தான் அவர்களுடைய சமயங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை ஆனால் மகனைக் பார்த்துள்ளார்கள் பார்த்ததில்லை ஆனால் , மகனைப்பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்øதையையும் பார்த்துள்ளான்.

சகோதரர்களே இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இதுதான் தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற உலகம் இந்து தவறியிருக்கலாம் ஆனால் என்றாவது உலகம் தழுவிய சமயம் என்ற ஒன்று உருவாக வேண்டுமானால் அது இடத்திலும் காலத்தாலும் எல்லைப்படுத்த படாததாக இருக்க வேண்டும் அந்த சமயம் யாரைப் பற்றிப் பிரச்சாரம் செய்கிறதோ அந்தக் கடவுளைப் போன்று எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன் தன் ஒளிக்கிரணங்களை எல்லோர் மீதும் சமமாகப் வீசுவதுபோல் அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும் அது பிராமண சமயமாகவோ பௌத்த சமயமாகவே கிறிஸ்தவ சமயமாகவோ முகமதிய சமயமாகவோ இருக்காமல் இவற்றின் ஒட்டுமொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல் உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்து இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை எல்லோருக்கும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும் அந்த சமயத்தில் பிற சமயத்தினரைத் துன்புறுத்தலும் சகிப்புத்தன்மையற்று நடந்துகொள்ளுதலும் இருக்காது.அது ஆண் பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை ஏற்றுக்கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும் . அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.

அத்தகைய சமயத்தை அளியுங்கள், எல்லாநாடுகளும் உங்களைப் பின்பற்றும் . அசோகரின் சபை பௌத்த சமய சபையாக இருந்தது. அக்பரது சபை இதைவிடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே இருந்தது. கடவுள் எல்லா சமயங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத்தான் கொடுத்து வைத்திருந்தது.

இந்துக்களுக்கு பிரம்மமாகவும் சொராஸ்டிரர்களுக்கு அஹுராமஸ்தாவாகவும் , பௌத்தர்களுக்கு புத்தராகவும் யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும் கிறிஸ்தவர்களுக்கு பர மண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள்உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும் சில பொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலோ சான்போ நதிகரையினில் முன்னை விட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது.

சுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க அயலாரின் இரத்ததில் கையினைத் தோய்க்காமல் , அயலாரைக் கொள்கையடிப்பதுதான் பணக்காரன் ஆகக் குறுக்குவழி என்று கண்டுபிடிக்காத உனக்குத்தான் சமரரசக்கொடி பிடித்து நாகரீகப்படையின் முன்னணியில் வெற்றிநடை போடும் பெரும்பேரு கொடுத்து வைத்திருந்தது.

2.வேதங்கள் கண்ட இந்து சமயம்;

நம் கவனத்தை மிகவும் அதிகமாகக் கவர்வது சமயக் கருத்துகள் அதாவது ஆன்மா கடவுள் மற்றும் சமயம் சம்பந்தமான அனைத்து சம்ஹிதைகளை எடுத்துக் கொள்வோம் ஆரியர்களின் மிகப் பழைய இலக்கியத்தில் உள்ள துதிப் பாடல்களின் தொகுப்பு இது. ஆரிய இலக்கியம் என்றல்ல ,உலகிலேயே மிகப் பழைய இலக்கியம் இது இவற்றைவிடப் பழைய சில இலக்கியத் துண்டு துணுக்குகள் இருக்கலாம். ஆனால் நூல்களாகச் சரியாகத் தொகுக்கப்பட்ட இலக்கியமாக வேறு எவையும் இல்லை. உலகிலேயே மிகப் பழைய நூல் இந்தத் தொகுப்பு நூல் தான் அன்றைய ஆசிரியர்களின் உணர்ச்சிகள், அவர்களது நோக்கங்கள் அவர்களுடைய பழக்கவழக்கங்கள் பற்றி இவற்றில் நாம் காண்கிறோம்.

ஆரம்பத்திலேயே ஒரு வினோதமான கருத்து காணப்படுகிறது இந்தத் துதிப்பாடல்கள் ஒளிமயமான பல தேவர்களைப் புகழ்வதாக உள்ளன. இவர்கள் ஏராளம் பேர் உள்ளனர் இந்திரன், வருணன், மித்திரன், பர்ஜன்யன், இப்படிப் பலர்.

இவர்களைப் பற்றிய புராணக் கதைகளும் உருவகக் கதைகளும் ஒவ்வொன்றாக நம் நினைவிற்கு வருகின்றன. பூமியில் மழை பெய்ய விடாமல் தடுத்த பாம்பைத் தன் வஜ்ராயுதத்தால் கொன்று வீழ்த்தியவன் இந்திரன் பாம்பு மடிந்ததும் மழை பொழிகிறது மக்கள் மகிழ்ந்து இந்திரனுக்கு ஆஹுதி அளித்து வழிபடுகிறார்கள் வேள்வித் தீயை வளர்த்து சில மிருகங்களைப் பலியிடுவார்கள். ஈட்டியில் அதனைக் குத்தி மாமிசத்தை வாட்டி அதனை இந்திரனுக்கு ஆஹுதியாக அளிப்பார்கள்.

சோமா என்றொரு செடிஇருந்தது. அது என்ன செடி என்பது இப்போது யாருக்கும் தெரியாது தற்போது அது அடியோடு மறைந்துவிட்டது அதைப் பற்றிய விவரங்கள் நூல்களில் காணப்படுகின்றன அதைக் கசக்ககினால் ஒருவிதப் பால் கிடைத்தது அதைப் புளிக்க வைத்தால் கிடைத்த சோமரசம் போதையை உண்டாக்கக் கூடிய பானமாக இருந்தது. இதை இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் அர்ப்பித்தனர் தாங்களும் அருந்தினர். சிலசமயம் அவர்கள் கொஞ்சம் அதிகமாக அருந்திவிடுவார்கள் தேவர்களும் அப்படியே இந்திரன் சிலவேளைகளில் மிதமிஞ்சிப் பருகிவிட்டு, உளறியதாகக்கூட நூலில் காண்கிறோம்.

வருணனும் இப்படித்தான். அவன் மிகவும் சக்தி வாய்ந்த தேவன். இந்திரனைப் போலவே தன் பக்தர்களைக் காப்பவன். அவர்களும் சோமரசத்தை அவனுக்கு அளித்துத் துதிக்கிறார்கள். இப்படியே ஒவ்வொருதேவனைப் பற்றியும் காணப்படுகிறது

Comments

Popular posts from this blog

என் வீர இளைஞர்களுக்கு,