Posts

Showing posts from May, 2013

எனது சிந்தனைகள் (பகுதி-4)

எனது சிந்தனைகள் ( பகுதி -4) அந்தப் பண்டிதர்கள் பூர்வ மீமாம்ச சாஸ்திரங்களை மிக நன்றாகக் கற்றவர்கள் என்பதை , அவர்கள் சென்ற பிறகு சீடர் சுவாமிஜியிடமிருந்து தெரிந்து கொண்டார் . சுவாமிஜி வேதாந்தமாகிய உத்தர மீமாம்ச தத்துவத்தை எடுத்துக் கூறிஞான நெறியே உயர்ந்தது என்பதை விளக்கினார் . பண்டிதர்கள் அவர் கூறியதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று . தமது தவறுக்காக பண்டிதர்கள் சிரித்ததைப்பற்றிக் குறி ப்பிட்ட சுவாமிஜி , தாம் பல வருடங்கள் சம்ஸ்கிருத மொழியைப் பேசாததால் தான் அந்தத் தவறு ஏற்பட்டது என்று கூறினார் . அந்தப் பண்டிதர்களைச் சிறிதும் அவர் குறை கூறவில்லை . விவாதத்தின் போது முக்கியப் பொருளிலிருந்து விலகி இலக்கணப் பிழை ஒன்றிலுள்ள குற்றத்தைக் காட்ட முயல்வதை மேலை நாட்டினர் நாகரீகக் குறைவாகக் கருதுவார்கள் என்பதைத் தெரிவித்தார் . பின்னர் நாகரீகம் படைத்தவர்கள் கருத்தைப் பார்ப்பார்களே , தவிர மொழியழகைப் பார்ப்பதில்லை . ஆனால் உங்கள் நாட்டில் அரிசியைப் பார்க்காமல் உமியைப்பற்றிதான் சண்டைபோடுவது வழக்கம் என்று சொல்லிவிட்டுச் சீடர