உண்மையான மனிதனும் தோன்றும் மனிதனும்!
உண்மையான மனிதனும் தோன்றும் மனிதனும்! நாம் இங்கே இருக்கிறோம், சிலவேளைகளில் நமது பார்வை வெகுதூரம் ஊடுருவிச் செல்கிறது. சிந்திக்க ஆரம்பித்த நாளிலிருந்து மனிதன் இதைச் செய்து கொண்டிருக்கிறான். எப்போதும் அவன் முன்னோக்கியே பார்க்கிறான். உடல் அழிந்தபின், தான் எங்கே போவோம் என்பதை அறிய விரும்புகிறான். இந்தப் பிரச்சினைக்கு விளக்கம் கூறும் வகையில் பல கொள்கைகள் தோன்றியிருக்கின்றன. பல கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில ஒதுக்கப்பட்டன. சில ஏற்றுக் கொள்ளப்பட்டன. மனிதன் உலகில் இருக்கும்வரையில் அவனுக்குச் சிந்தனைச் சக்தி இருக்கும்வரையில் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கும். இந்தக் கொள்கைகள் ஒவ்வொன்றிலும் சிறிது உண்மை இருக்கிறது. கணிசமான அளவு உண்மை அல்லாத கொள்கைகளும் இருக்கின்றன. அவ்வப்போது இந்தியத் தத்துவ ஞானியரிடமிருந்து எழுந்த இந்தக் கருத்துக்கள் பலவற்றையும் இயைபுபடுத்தி உங்கள் முன் வைக்க முயல்கிறேன். மனஇயல்வாதிகள், தத்துவ மேதைகள், இவர்களின் சிந்தனையோடு, முடிந்தால், நவீன விஞ்ஞானிகளின் சிந்தனையையும் இணைத்து விளக்க முயல்கிறேன். வேதாந்தத் தத்துவத்தின் ஒரே குறிக்கோள் ஒருமையைத் தேடுவதுத