Posts

Showing posts from 2013

உண்மையான மனிதனும் தோன்றும் மனிதனும்!

உண்மையான மனிதனும் தோன்றும் மனிதனும்! நாம் இங்கே இருக்கிறோம், சிலவேளைகளில் நமது பார்வை வெகுதூரம் ஊடுருவிச் செல்கிறது. சிந்திக்க ஆரம்பித்த நாளிலிருந்து மனிதன் இதைச் செய்து கொண்டிருக்கிறான். எப்போதும் அவன் முன்னோக்கியே பார்க்கிறான். உடல் அழிந்தபின், தான் எங்கே போவோம் என்பதை அறிய விரும்புகிறான். இந்தப் பிரச்சினைக்கு விளக்கம் கூறும் வகையில் பல கொள்கைகள் தோன்றியிருக்கின்றன. பல கோட்பாடுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில ஒதுக்கப்பட்டன. சில ஏற்றுக் கொள்ளப்பட்டன. மனிதன் உலகில் இருக்கும்வரையில் அவனுக்குச் சிந்தனைச் சக்தி இருக்கும்வரையில் இப்படித் தான் நடந்து கொண்டிருக்கும். இந்தக் கொள்கைகள் ஒவ்வொன்றிலும் சிறிது உண்மை இருக்கிறது. கணிசமான அளவு உண்மை அல்லாத கொள்கைகளும் இருக்கின்றன. அவ்வப்போது இந்தியத் தத்துவ ஞானியரிடமிருந்து எழுந்த இந்தக் கருத்துக்கள் பலவற்றையும் இயைபுபடுத்தி உங்கள் முன் வைக்க முயல்கிறேன். மனஇயல்வாதிகள், தத்துவ மேதைகள், இவர்களின் சிந்தனையோடு, முடிந்தால், நவீன விஞ்ஞானிகளின் சிந்தனையையும் இணைத்து விளக்க முயல்கிறேன். வேதாந்தத் தத்துவத்தின் ஒரே குறிக்கோள் ஒருமையைத் தேடுவதுத

ஆன்மா: அதன் தளையும் முக்தியும்

ஆன்மா: அதன் தளையும் முக்தியும் அத்வைத வேதாந்தத்தின் கருத்துப்படி, பிரபஞ்சத்தில் உண்மையாக இருப்பது ஒன்றே. அதைப் பிரம்மம் என்று அத்வைத வேதாந்தம் குறிக்கிறது. மற்ற எதுவுமே உண்மையற்றவை, மாயையின் சக்தியால் பிரம்மத்திலிருந்து வெளிப்படுவை, உருவாக்கப்படுபவை. அந்தப் பிரம்மத்தை மீண்டும் அடைவதே நமது குறிக்கோள். நாம் ஒவ்வொருவரும் அந்தப் பிரம்மமாகிய உண்மையும் இந்த மாயையும் கலந்த கலவைதான். மாயை அல்லது அறியாமையிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால், நாம் உண்மையில் யாரோ அதுவாக ஆவோம். இந்தத் தத்துவத்தின்படி, ஒவ்வொரு மனிதனும் மூன்று பகுதிகளால் ஆனவன்-உடல், அந்தக்கரணம் அல்லது மனம், அதன் பின்னால் ஆன்மா. இந்த ஆன்மாவின் புறப் போர்வை உடல், அகப் போர்வை மனம். உண்மையில் ஆன்மாவோ எல்லாவற்றையும் உணர்ந்து அனுபவிக்கிறது. உடலில் உறைவது ஆன்மாவே. இதுவே அந்தக்கரணமான மனத்தின்மூலம் உடலை இயக்குகிறது. மனித உடலில் ஜடப்பொருள் அல்லாதது இந்த ஆன்மா ஒன்றுதான். ஜடப்பொருளாக இல்லாததால் அது கூட்டுப்பொருளாக இருக்க முடியாது. கூட்டுப்பொருள் அல்லாததால் அது காரணகாரிய விதிகளுக்கு உட்பட்டதல்ல. ஆகவே அது அழிவற்றது. அழிவற்ற ஒன்றிற்கு ஆரம்பம்

ஆன்மா

ஆன்மா பேராசிரியர் மாக்ஸ்முல்லரின் வேதாந்தத் தத்துவம் பற்றிய மூன்று சொற்பொழிவுகள் என்ற பிரபல நூலை உங்களுள் பலர் படித்திருப்பீர்கள். அதே விஷயத்தைப் பற்றி பேராசிரியர் டய்சன் ஜெர்மானிய மொழியில் எழுதிய நூலை சிலர் படித்திருக்கலாம். இந்திய மதச் சிந்தனையைப்பற்றி மேலை நாடுகளில் எழுதியும் கற்பித்தும் வருபவற்றுள் ஒரு நெறி முக்கியமாகக் கையாளப்படுகிறது. அது அத்வைதம். வேதங்களின் போதனைகள் முழுவதும் அந்த ஒரு நெறியிலேயே அடங்கி விட்டது என்றும் கருதப்படுகிறது. ஆனால் இந்தியச் சிந்தனையில் பல நிலைகள் இருக்கின்றன. மற்ற நிலைகளோடு ஒப்பிட்டால், அத்வைதம் சிறுபான்மை நெறி என்றே சொல்ல வேண்டும். மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியச் சிந்தனையில் பல பிரிவுகள் இருந்திருக்கின்றன. இன்ன பிரிவினர் இன்ன கோட்பாட்டை நம்ப வேண்டும் என்றெல்லாம் வகுத்துத் தருவதற்கான அத்தாட்சி பெற்ற எந்தச் சங்கமோ அமைப்போ இல்லாததால், மக்கள் தங்களுக்குப் பிடித்த மதப் பிரிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு தத்துவத்தையும் மதப்பிரிவையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் சுதந்திரம் இருந்தது. எனவே மிகப் பழங்காலத்திலிருந்தே இந்திய