ஆவி உலகம்-தொடர்-பாகம்-7
ஆவி உலகம்-தொடர்-பாகம்-7 .. பழைய காலத்தில் ஊர்பகுதிகளில் கிடா(ஆண் ஆடு) நேர்ந்துவிடும் பழக்கம் உண்டு.ஒரு வீட்டில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் மறுநாளே சிறிய ஆண்ஆடு ஒன்றை வாங்கி வந்து வளர்ப்பார்கள்.(ஆண்ஆடு) இதன் கருத்து என்னவென்றால் இறந்தவரின் ஆவி சில காலம் ஆட்டிற்குள் சென்று வாழும்.இதனால் அந்த ஆவி மனிதர்களை தொந்தரவு செய்யாது.இது மறுபிறவி மாதிரிதான்.சில இடங்களில் காளையை வளர்ப்பார்கள். நேர்ந்துவிடுதல் என்று கூறுவார்கள். மனிதனின் பாவத்தை ஒரு ஆட்டின்மேல் ஏற்றுதல்.அல்லது ஆவியை ஆட்டிற்குள் இறக்குதல்.இறந்தவரின் பெயர்கொண்டே அந்த ஆட்டை அழைப்பார்கள். இவ்வாறு நேர்ந்து விடப்பட்ட ஆடு, சுதந்திரமாக உலாவரும்.அதை கயிறுகொண்டு கட்டமாட்டார்கள். யாரும் அடிக்க மாட்டார்கள். நேர்ந்துவிடப்பட்ட ஆடு என்பது ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும். ஆடு நன்றாக வளர்ந்த பிறகு கோவில் திருவிழாவின்போது பலி கொடுத்து,அதன் இறைச்சியை அனைவரும் பங்கிட்டுக்கொள்வார்கள். .. இவ்வாறு செய்வதன் மூலம் இறந்தவரின் பாவம் பங்கிடப்படும். அவருக்கு சாந்தி ஏற்படும். மறுபிறவி ஏற்படாது என்பது கருத்து. ... முற்காலத்தில் ஆரியர்கள் இறந்தவர்களின் உட...